நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 28ஆம் தேதி சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிக் கொள்ளும் முக்கிய போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு இரு அணிகளின் பிளேயிங் லெவன் எவ்வாறு அமையலாம்? என்பது குறித்து பார்க்கலாம்.
கடந்த ஆண்டு ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் இறுதியாக மோதி கொண்ட போட்டியில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறலாம் என்கின்ற நிலை இருந்தது. இந்த போட்டியில் பரபரப்பான கடைசி கட்டத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. மேலும் இந்த போட்டியை சுற்றி சில சச்சரவுகள் இருந்தது. எனவே இந்த முறை சிஎஸ்கே இதற்கு பதிலடி கொடுக்குமா? என்கின்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
ஆர்சிபி பிளேயிங் லெவன்
இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகின்ற காரணத்தினால் கூடுதல் சுழல் பந்துவீச்சாளரை ஆர்சிபி அணி கொண்டு வருமா? என்கின்ற கேள்வி இருக்கிறது. ஆனால் ஆர்சிபி அணியிடம் சுயாஸ் ஷர்மா, குர்னால் பாண்டியா மற்றும் பகுதிநேர சுழல் பந்துவீச்சாளர் லிவிங்ஸ்டன் ஆகியோர் இருக்கிறார்கள். எனவே காயத்தில் இருக்கும் புவனேஸ்வர் குமார் உள்ளே வரும் பொழுது, ராசிக் சலாம் வெளியேற்றப்படுவார் என்று மட்டும் தெரிகிறது.
பில் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் பட்டிதார், லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குர்னால் பாண்டியா, புவனேஸ்வர் குமார், ஜோஸ் கேசில்வுட், யாஸ் தயால் மற்றும் இம்பேக்ட் பிளேயராக சுயாஸ் சர்மா இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது.
சிஎஸ்கே பிளேயிங் லெவன்
சிஎஸ்கே அணியை பொறுத்த வரை தங்கள் சொந்த மைதானத்தில் விளையாடுகின்ற காரணத்தை நான் ஏற்கனவே முதல் போட்டியில் சென்ற அதே பிளேயிங் லெவனுடன் செல்வார்கள் என்று பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று சுழல் பந்துவீச்சாளர்கள் மற்றும் மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் இடம் பெறுவார்கள். காயம் சரியாகி இருந்தால் மதிஷா பதிரனா உள்ளே வரலாம்.
ரச்சின் ரவீந்தரா, ராகுல் திரிபாதி, ருதுராஜ், சாம் கரன், சிவம் துபே, தீபக் ஹடா, ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி, ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அகமத், நாதன் எல்லீஸ் இம்பேக்ட் பிளேயராக கலீல் அகமத்.
இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. ஆர்சிபிக்கு எதிராக சிஎஸ்கே அணியில் இருக்கும் 3 பிரச்சினை.. சரி செய்வாரா ருதுராஜ்?
இந்த போட்டி இரண்டு அணி ரசிகர்களாலும் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஆர்சிபி அணியும் முதல் போட்டியில் கே கே ஆர் அணியை கொல்கத்தா மைதானத்தில் வைத்து வென்றதால் நம்பிக்கையுடன் காணப்படுகிறது. அதே சமயத்தில் சிஎஸ்கே அணிக்கு சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் சேப்பாக்கத்தில் கிடைத்திருப்பது பெரிய சாதகமாகவும் அமைந்திருக்கிறது. எனவே இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது!






