ஐபிஎல் 2025.. ஆர்சிபிக்கு எதிராக சிஎஸ்கே அணியில் இருக்கும் 3 பிரச்சினை.. சரி செய்வாரா ருதுராஜ்?

0
195

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் வெள்ளிக்கிழமை ஆர் சி பி அணியை எதிர்கொள்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற வேண்டும் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இதற்கு காரணம் கடந்த ஆண்டு சிஎஸ்கே அணி பெங்களுருவில் தோல்வியை தழுவி பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்ததும் அப்போது ஆர்.சி.பி. ரசிகர்கள் சிஎஸ்கே ரசிகர்களிடம் அடாவாடி செய்தார்கள். இதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என சிஎஸ்கே ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ்  முதல் போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றாலும் சில சிக்கல்கள் இருக்கிறது.

- Advertisement -

பேட்டிங்கில் உள்ள சிக்கல்:

பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா இல்லாத மும்பை இந்தியன்ஸ் அணியை கடைசி கட்டத்தில் தான் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. இதனால் ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி தங்களுடைய பிரச்சனைகளை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

சிஎஸ்கே அணியிடம் இருக்கும் முதல் பிரச்சனை பேட்டிங் மட்டும்தான். தொடக்க வீரராக ராகுல் திருப்பாதி மற்றும் ரச்சின் ரவீந்திர ஆகியோர் விளையாடினார்கள். ராகுல் திருப்பாதி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். ரச்சின் ரவீந்திர ஆங்கர் ரோல் செய்வார். ஆனால் ராகுல் திருப்பாதி மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் சோபிக்கவில்லை.

- Advertisement -

டெத் பவுலிங் பிரச்சினை:

இதனால் ராகுல் திருப்பாதி தன்னுடைய திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். சிஎஸ்கே அணியில் இருக்கும் இரண்டாவது பிரச்சனை நடுவரிசை தான். மற்ற அணிகளில் எல்லாம் பேட்டிங் பலமாக இருக்கிறது. சிஎஸ்கே அணியில் சிவம் துபே, தீபக் ஹூடா மற்றும் ஷாம்கரன் ஆகியோர் நடு வரிசையில் விளையாடுகிறார்கள்.

இந்த மூன்று வீரர்களும் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனால் ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டியில் இந்த மூன்று வீரர்களும் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: ஐபிஎல் 2025.. சிஎஸ்கே மட்டும் ரன் ரேட் பற்றி கவலைப்படுவது இல்லை.. ஏன் தெரியுமா? தோனி சொன்னதை பாருங்க!

சிஎஸ்கே  இடம் இருக்கும் மூன்றாவது  பிரச்சினை. சிஎஸ்கே அணி மும்பைக்கு எதிரான போட்டியில் நல்ல முறையில் பந்து வீசினாலும், கடைசி கட்டத்தில் தீபக்சாகர் எல்லாம் அடிக்க விட்டார்கள். ஆர் சி பி அணியின் பேட்டிங் வலுவாக இருக்கும் என்பதால் டெத் ஓவர்களில் சிஎஸ்கே அணி ரன்களை கட்டுப்படுத்த வேண்டும்.

- Advertisement -