அவர்களைப் பார்த்து எனக்கு பயமில்லை.. நான் குழந்தையாக வளரும்போதே இதுதான் என் ஆசை.. ஆரோன் ஜோன்ஸ் ஓபன் டாக்

0
7727

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா மற்றும் அமெரிக்க அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்த நிலையில் அமெரிக்க வீரர் ஆரோன் ஜோன்ஸ் இந்திய அணிக்கு எதிராக சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் அமெரிக்க அணிகள் தலா இரண்டு வெற்றிகளை பெற்று தற்போது புள்ளி பட்டியலில் முதல் இரு இடங்களை வகிக்கின்றன. கிட்டத்தட்ட பிளே ஆப் சுற்றுக்கு இந்த இரண்டு அணிகளும் தகுதி பெற்றுள்ள நிலையில், அதனை உறுதி செய்ய இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற முயற்சிக்கும்.

- Advertisement -

இந்திய அணி இரண்டு வெற்றிகள் கொடுத்த உத்வேகத்தில் மூன்றாவது போட்டியையும் மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும். மேலும் மூன்றாவது போட்டியும் ஒரே மைதானத்தில் நடைபெற உள்ளதால் மைதானத்தின் சூழ்நிலையை பற்றி இந்திய அணி நன்கு உணர்ந்திருக்கும். பந்துவீச்சில் மிக பலம் வாய்ந்த இந்திய அணி பேட்டிங்கில் மற்றும் இன்று சில மாற்றங்கள் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா அணி இந்த தொடரில் ஆச்சரியம் கலந்த வெற்றிகளை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக முதல் போட்டியில் வலுவான பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தங்களது முத்திரையை பதித்தது. மேலும் அந்த அணியில் இந்திய வம்சவளியைச் சேர்ந்த ஆறு வீரர்கள் பிளேயிங் லெவனில் விளையாடுவதால், அமெரிக்க அணிக்கு இது மிகவும் சாதகமாக உள்ளது. இந்த சூழ்நிலையில் அமெரிக்க அணி வீரரான ஆரோன் ஜோன்ஸ் இந்திய அணிக்காக விளையாடுவது பயத்தை விட உற்சாகத்தை அளிக்கிறது என்று கூறி இருக்கிறார்.

மேலும் சிறு வயதிலிருந்தே உலகத்தரம் வாய்ந்த வீரர்களுக்கு எதிராக விளையாடுவதை விரும்புவதாகவும் கூறியிருக்கிறார் இது பற்றி ஆரோன் ஜோன்ஸ் விரிவாக கூறும்பொழுது
“இது எனக்கு உற்சாகமாக இருக்கிறது. நான் குழந்தையாக வளரும் காலத்திலிருந்து சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாடுவதையே விரும்புகிறேன். தற்போது அதற்கான வாய்ப்பை பெறுவதில் மிகுந்த மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் இருக்கின்றேன். இந்திய வீரர்களுடன் பேசுவதற்கும் விளையாடுவதற்கு உற்சாகமாக இருக்கின்றேன்.

- Advertisement -

நிச்சயமாக அவர்களையும் இந்த போட்டியில் தோற்கடிப்பேன். எங்கள் அணியில் உள்ள இந்திய வம்சாவளி வீரர்களும் இந்தப் போட்டியை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்கொள்ள உள்ளனர். அமெரிக்க அணி இந்திய அணிக்கு எதிராக டி20 போட்டியில் விளையாடுவது இதுவே முதல் முறை. எங்கள் அணியில் உள்ள பல வீரர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கடந்த காலங்களில் இந்திய அணிக்காக விளையாடி இருப்பார்கள். அவர்களும் இந்த போட்டியை ஆர்வமாக எதிர் கொள்ள உள்ளனர்.

இதையும் படிங்க:ரிஸ்வான் ஒரே போட்டியில்.. சிறப்பான மற்றும் மோசமான 2 சாதனை.. கனடாவுக்கு எதிராக விசித்திர நிகழ்வு

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மக்கள் கிரிக்கெட்டை விரும்புவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இந்தத் தொடரின் மூலம் அமெரிக்காவில் மேலும் பல மக்கள் கிரிக்கெட்டை உற்று நோக்குவார்கள். மேலும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டும் இடம் பெற்று இருக்கிறது ஒரு நல்ல விஷயமாகும். அமெரிக்காவில் கிரிக்கெட் வளர்ந்து வருவது ஒரு நல்ல விஷயம்”என்று கூறியிருக்கிறார்.