ரிஸ்வான் ஒரே போட்டியில்.. சிறப்பான மற்றும் மோசமான 2 சாதனை.. கனடாவுக்கு எதிராக விசித்திர நிகழ்வு

0
2593
Rizwan

ஐசிசி 9வது டி20 உலகக்கோப்பை தொடரில் நியூயார்க் நாசா மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் கனடா அணிகள் மோதிக்கொண்ட முக்கிய போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இலக்கை பாகிஸ்தான அணி துரத்தும் பொழுது முகமது ரிஸ்வான் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் அரை சதம் அடித்து வெல்ல வைத்தார். இந்தப் போட்டியில் சிறப்பான மற்றும் மோசமான என இரண்டு சாதனைகள் படைத்திருக்கிறார்.

இன்றைய போட்டியில் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. மேலும் இந்த முறை துவக்க ஆட்டக்காரராக சையும் அயூப்பை கொண்டு வந்தது. கேப்டன் பாபர் அசாம் பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்திற்கு தன்னை இறக்கி கொண்டார்.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த கனடா அணிக்கு எல்லா பேட்ஸ்மேன்களும் ஏமாற்றிய நிலையில், அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் ஆரோன் ஜான்சன் 44 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். அவரது அரை சதத்தின் காரணமாக அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் பந்துவீச்சில் முகமது ஆமீர் மற்றும் ஹாரிஸ் ரவுப் இருவரும் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினார்கள்.

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் இருவரும் இணைந்து 62 பந்தில் 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். மேலும் முகமது ரிஸ்வான் 53 பந்தில் ஆட்டம் இழக்காமல் 53 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான அணி 17.3 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியை நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பெற்றது.

இந்த போட்டியில் அரைசதம் அடித்ததின் மூலமாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக அரை சதங்கள் அடித்த வீரர் என்கின்ற சாதனையை முகமது ரிஸ்வான் படைத்திருக்கிறார்.
முகமது ரிஸ்வான் 30 அரைசதங்கள் 71 இன்னிங்ஸ்
ரோகித் சர்மா 30 அரைசதங்கள் 118 இன்னிங்ஸ்
பாபர் அசாம் 28 அரைசதங்கள் 84 இன்னிங்ஸ்
டேவிட் வார்னர் 27 அரைசதங்கள் 98 இன்னிங்ஸ்

- Advertisement -

இதையும் படிங்க : 17.3 ஓவர்.. கனடாவை வென்ற பாகிஸ்தான்.. 2வது சுற்றுக்கு தகுதிபெற முக்கிய 3 விஷயங்கள்

இந்த போட்டியில் 52 பந்துகளில் முகமது ரிஸ்வான் அரைசதம் எடுக்க, டி20 உலக கோப்பை வரலாற்றில் மிக அதிக பந்தியில் அடிக்கப்பட்ட அரை சதம் என்கின்ற மோசமான சதனையும் பதிவாகி இருக்கிறது. இதே டி20 உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்காவின் டேவிட் வார்னர் 50 பந்துகளில் நெதர்லாந்து அணிக்கு எதிராக அரைசதம் அடித்து இருந்ததே இந்த வகையில் மோசமான சாதனையாக இருந்தது. இப்படி ஒரே போட்டியில் சிறப்பான மற்றும் மோசமான என இரண்டு சாதனைகளை முகமது ரிஸ்வான் படைத்திருக்கிறார்!