இன்னைக்கு பேட்டிங் அட்டாக் பாத்தீங்க; சென்னையில் எங்களோட பவுலிங் அட்டாக் பாப்பீங்க – சுப்மன் கில் சூளுரை!

0
3623

“சென்னைக்கு எதிராக சென்னையில் விளையாடுவதை ஆவளோடு எதிர்பார்த்திருக்கிறேன். அங்கே சிறப்பாக செயல்படும் அளவிற்கு எங்களது பவுலிங் அட்டாக் இருக்கிறது.” என போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்துள்ளார் சுப்மன் கில்.

ஆர்சிபி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த லீக் போட்டியில் முதலில் விளையாடிய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி சதம் அடித்து அசத்தியதால், 197 ரன்கள் குவித்தது ஆர்சிபி அணி.

- Advertisement -

இந்த இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சுப்மன் கில் சதம் அடித்து பதிலடி கொடுத்தார். அத்துடன் இறுதிவரை நின்று விளையாடி கொடுத்து, 19.1 ஓவர்களில் வெற்றிபெற உதவினார். குஜராத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் ஆர்சிபி அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பு நழுவவிட்டது.

52 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் ஐந்து பவுண்டரிகள் உட்பட 104 ரன்கள் குவித்த சுப்மன் கில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். போட்டி முடிந்த பிறகு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

“நான் சிறந்த ஃபார்மில் இருப்பதாக உணர்கிறேன். நல்ல துவக்கம் கிடைத்து, அதை பெரிய ஸ்கோர் ஆக மாற்ற முடிகிறது. இந்த சீசனின் முதல் பாதியில் எனக்கு கிடைத்த நல்ல துவக்கத்தை பெரிய ஸ்கோராக மாற்ற முடியாமல் இருந்தது. 40-50 ரன்களில் அவுட்டாகி வந்தேன். ஐபிஎல் இரண்டாம் பாதியில் கிடைத்த நல்ல துவக்கத்தை பெரிய ஸ்கோராக மாற்ற முடிவது மகிழ்ச்சியை கொடுக்கிறது.

- Advertisement -

(டி20 கிரிக்கெட் பற்றி)டி20 போட்டிகளை பொறுத்தவரை தொடர்ந்து ஷாட் விளையாடிக்கொண்டே இருக்கவேண்டும். அதற்காக முனைப்புடன் இருக்க வேண்டும், மேலும் உங்களது டெக்னிக்கை பயன்படுத்தி நம்பிக்கையுடன் அணுக வேண்டும்.

இன்றைய போட்டியில் புதிய பந்து சற்று நின்று வந்தது. அதற்கேற்றவாறு நிதானமான அணுகுமுறையை கையாண்டேன். பந்தில் ஈரப்பதம் இருக்கும் பொழுது பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருந்தது.

(பார்ட்னர்ஷிப் பற்றி)விஜய் சங்கர் பந்தை அடித்து விளையாட வேண்டும் என்று அணுகினார். அப்போது நான் அவரிடம் சென்று சரியான பொசிஷனில நின்று, பந்தை அதன் வேகத்திற்கு ஏற்றவாறு பேட்டை விட்டால் போதும் என்று சொன்னேன். அவர் அவரது ஆட்டத்தை பெற்றுவிட்டால் அனைத்து பக்கங்களிலும் அடிக்கக் கூடியவர். இன்று அதை நன்றாக செய்து கொடுத்தார். மேலும் என்னுடைய பேட்டிங் அணுகுமுறை பற்றி எனக்கு நன்றாக தெரியும். மேலும் எந்தெந்த பக்கங்களில் என்னால் அடிக்க முடியும் என்றும் தெரியும். அதை சார்ந்து பேட்டிங் செய்தேன்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சென்னை மைதானத்தில் எதிர்கொள்வதற்கு ஆவலாக இருக்கிறேன். எங்களது அணியில் சிறந்த பவுலிங் அட்டாக் சென்னை மைதானத்திற்கு ஏற்றவாறு இருக்கிறது. அவர்களை வீழ்த்தி இரண்டாவது முறையாக பைனலுக்கு செல்வேன் என்று நம்புகிறேன்.” என கூறினார்.