என்ன அவங்க ரொம்ப நம்புறாங்க.. அதான் எனக்கு இத பண்றாங்க.. ஆட்டநாயகன் ரவி பிஷ்னாய் பேட்டி

0
259

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி இருக்கிறது.

இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரவி பிஸ்னாய் ஆட்டநாயகன் விருது வென்றதோடு இந்த போட்டி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி பேட்டிங் தொடங்கிய இலங்கை அணி முதல் விக்கெட்டுக்கு 26 ரன்கள் குவித்த நிலையில் குஷால் மெண்டிஸ் 10 ரன்களில் வெளியேறினார். இரண்டாவது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த நிஷான்கா மற்றும் குஷால் பெரேரா ஆகியோர் சிறப்பாக விளையாடி 36 பந்துகளில் 54 ரன்கள் குவித்தனர்.

இதில் நிஷான்காவை சுழற் பந்து வீச்சாளர் ரவி பிஸ்னாய் பிரித்தார். அதற்குப் பிறகு இலங்கை அணியின் விக்கெட்டுகள் விரைவாக இழக்க இலங்கை அணி 20 ஓவர்களில் 161 ரன்கள் மட்டுமே குவித்தது.இதில் சிறப்பாக பந்து வீசிய ரவி பிஸ்னாய் நான்கு ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதற்குப் பிறகு பேட்டிங் தொடங்கிய இந்திய அணிக்கு மழையால் ஆட்டம் தாமதிக்கப்பட்டது.

- Advertisement -

பின்னர் டக்வோர்த் லிவீஸ் விதிப்படி 45 பந்துகளில் 72 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 6.3 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இதனால் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் டி20 தொடரையும் கைப்பற்றி இருக்கிறது.

இந்த வெற்றி குறித்து ஆட்டநாயகன் விருது பெற்ற ரவி பிஸ்னாய் கூறும்போது “நேற்றை விட ஆடுகளம் இன்று சற்று வித்தியாசமாக இருந்தது. சுழற் பந்துவீச்சுக்கும் நன்கு ஒத்துழைத்தது. இன்று முதல் இன்னிங்ஸில் ஆடுகளம் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைத்தது. நான் என்னுடைய திட்டங்களோடு இன்றைய போட்டியில் பந்து வீசினேன். நான் கூக்ளி வகையான பந்துகளை வீச விரும்புகிறேன்.

இதையும் படிங்க:136 ரன்.. அஸ்வின் டீமின் பொன்னான வாய்ப்பை பறித்த நெல்லை.. கடைசி லீக் மேட்ச் திண்டுக்கல் தோல்வி.. டிஎன்பிஎல் 2024

எனது கூக்ளி வகையான பந்துவீச்சு இடது கை ஆட்டக்காரர்களுக்கு கடினமாக இருந்தது. இறுதிக்கட்டத்தில் பந்து வீசுவதை நான் சிறந்த பொறுப்பாக உணர்கிறேன். அதாவது இறுதிக் கட்டத்தில் என்னை நம்பி பந்தை தருவதற்கு காரணம் கேப்டனும், அணி நிர்வாகமும் என்னை நம்புகிறார்கள் என்று அர்த்தம். நான் அந்தப் பொறுப்பை உணர்ந்து செயல்பட விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -