பியூஸ் சாவ்லா தேர்வு செய்த.. ஆல் டைம் ODI இந்திய அணி.. கோலிக்கு அந்த இடம் கிடையாது.. மாஸ் செலக்சன்

0
198
Virat

இந்திய வீரர் பியூஸ் சாவ்லா ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தன்னுடைய இந்திய அணி பயணம் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். மேலும் தன்னுடைய ஆல் டைம் ஒரு நாள் கிரிக்கெட் இந்திய அணி பிளேயிங் லெவனையும் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

தற்போது 35 வயதாகும் பியூஸ் சாவ்லா சில வருடங்களுக்கு முன்பாகவே இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்து விட்டாலும், இன்னும் ஓய்வு முடிவை அறிவிக்காமல் இருக்கிறார். நடுவில் சிஎஸ்கே அணிக்காக வாங்கப்பட்டு தற்பொழுது மும்பை அணிக்காக விளையாடினார்.

- Advertisement -

2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை

இந்தியாவில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா யாரும் எதிர்பார்க்காத வகையில் கழட்டி விடப்பட்டார். அப்போது அது பெரிய ஆச்சரியமாக பார்க்கப்பட்டது. மேலும் தனிப்பட்ட முறையில் ரோகித் சர்மாவுக்கு இன்று அளவு அது ஒரு வடுவாகவே இருந்து வருகிறது.

அப்படியான நிலையில் இந்திய அணி தேர்வுக்குழுவிடம் ரோகித் சர்மாவுக்கு பதிலாக அப்போதைய கேப்டன் மகேந்திர சிங் தோனி பியூஸ் சாவ்லாவை கேட்டு வாங்கிய விஷயம் சில முன்பு தேர்வுக்குழுவில் இடம் பெற்று இருந்த ஒருவரால் வெளியிடப்பட்டது. இதன் காரணமாக தன்னுடைய ஆரம்ப கிரிக்கெட் வாழ்விலேயே உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் பியூஸ் சாவ்லா இடம்பெற்று விட்டார்.

- Advertisement -

ஆல் டைம் ஒருநாள் கிரிக்கெட் இந்திய பிளேயிங் லெவன் :

இந்த நிலையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பியூஸ் சாவ்லா தன்னுடைய ஆல் டைம் ஒரு நாள் கிரிக்கெட் இந்திய பிளேயிங் லெவனை தேர்வு செய்தார். ஒட்டுமொத்தமாக அவர் தேர்வு செய்திருக்கும் அணி மிகச் சிறந்ததாக இருக்கிறது. அதே சமயத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்திய விராட் கோலிக்கு அவருடைய மூன்றாவது இடத்தை பியூஸ் சாவ்லா தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இந்தியா ஆஸி டெஸ்ட்.. என்னோட ஆர்வம் இந்த பெஸ்ட் பிளேயர்ஸ் 2 பேர் மேலதான்.. என்ன செய்றாங்கன்னு பார்க்கணும் – மேக்ஸ்வெல் பேட்டி

பியூஸ் சாவ்லா ஒருநாள் கிரிக்கெட் பிளேயிங் லெவன் :

சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா, வீரேந்திர சேவாக், விராட் கோலி, யுவராஜ் சிங், எம்எஸ்.தோனி, கபில்தேவ், ஹர்பஜன் சிங், அனில் கும்ப்ளே, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஜாகீர் கான்.

- Advertisement -