ஓபனா சொல்றேன்.. 9 டீமும் அவங்கள பார்த்து பயப்படுறாங்க.. 11 பேரும் மேட்ச் வின்னர்கள் – பியூஸ் சாவ்லா பேட்டி

0
321
Piyush

நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு அணியை பார்த்து மற்ற ஒன்பது அணிகளும் பயப்படுவதாகவும், அந்த அணியின் பிளேயிங் லெவனில் இருக்கும் 11 வீரர்களும் மேட்ச் வின்னர்கள் என்றும் பியூஸ் சாவ்லா கூறியிருக்கிறார்.

தற்போது ஐபிஎல் தொடரின் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இருந்து வருகின்றன. மேலும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பந்துவீச்சில் அசாத்திய வலிமையை கொண்டு போப்பையை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

மூன்று சிறந்த அணிகள்

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தனது முதல் ஐந்து போட்டிகளில் ஒரு போட்டியை மட்டும் வென்று நான்கு போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்திருந்தது. பேப்பரில் மிகச் சிறந்த அணியாக காணப்படும் மும்பை இந்தியன்ஸ் அணியால் வெற்றியை கொண்டு வர முடியவில்லை. ஆனால் இறுதியாக ஐந்து போட்டிகளை தொடர்ந்து வென்று 10 போட்டிகளில் 12 புள்ளிகள் எடுத்து புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

இதேபோல ஆர்சிபி அணி தொடர்ச்சியாக வெளி மைதானத்தில் ஆறு வெற்றிகளை பதிவு செய்து, அதே சமயத்தில் தொடர்ச்சியாக சொந்த மைதானத்தில் மூன்று போட்டிகளை தோற்று, மொத்தம் பத்து போட்டிகளில் 7 போட்டிகளை வென்று 14 புள்ளிகள் உடன் முதலிடத்தில் இருக்கிறது. இதேபோல பந்துவீச்சில் பலம் வாய்ந்த குஜராத் டைட்டன்ஸ் எட்டு போட்டிகளில் ஆறு பொட்டுகளை வென்று 12 புள்ளிகள் கூட மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

இந்த அணியை பார்த்து பயப்படுகிறார்கள்

இது குறித்து பியூஸ் சாவ்லா பேசும்பொழுது ” மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள மேட்ச் வின்னர்களை பார்த்தால் அவர்களுடைய ப்ளேயிங் லெவனில் இருக்கும் 11 பேருமே மேட்ச் வின்னர் ஆகவே இருக்கிறார்கள். இன்று ரிக்கல்டன் எப்படி விளையாடினார் என்று பார்ப்போம். மேலும் வில் ஜேக்ஸ் பந்துவீச்சில் முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி கொடுத்தார். மேலும் ரோகித் சர்மாவும் சிறப்பாக இருக்கிறார். இன்று பும்ராவும் சிறப்பான முறையில் செயல்பட்டு இருக்கிறார்”

இதையும் படிங்க : 2008 முதல் ஐபிஎல்.. நான் சொந்த டெல்லிக்கு கோலியை வாங்காத காரணம் இதுதான் – சேவாக் வெளியிட்ட தகவல்

“எனவே விஷயங்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக மாறுகின்றன. ஹர்திக் பாண்டியா என்ன செய்தாலும் அது சரியாகவே போகிறது. இந்த அணியில் பல மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள். இன்று இம்பேக்ட் பிளேயராக வந்த பும்ரா என்ன செய்தார் என்று நாம் பார்த்தோம். இதனால்தான் மும்பை இந்தியன்ஸ் அணி முன்னணியில் இருக்கிறது. எனவே மற்ற ஒன்பது அணிகளும் அவர்களை பார்த்து பயப்படுகிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -