இந்திய கிரிக்கெட்

இந்தியா முதல் டெஸ்ட்.. மெக்கலம் ஸ்டோக்ஸ் கேட்டதை தர முடியாது.. ஆடுகள தயாரிப்பாளர் அதிரடி பேட்டி

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளை தயாரிப்பாளர் இங்கிலாந்து அணியின் நிர்வாகத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஆடுகளம் இருக்காது என்று அதிரடியாக தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இந்த இரு அணிக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் நகரின் ஹெட்டிங்லி மைதானத்தில் நாளை மறுநாள் தொடங்க இருக்கிறது. பொதுவாக தொடரின் மத்தியில்தான் இங்கு போட்டி நடக்கும். ஆனால் தற்பொழுது ஆரம்பத்திலேயே இங்கு போட்டி நடைபெறுகிறது.

கடந்த முறை நடந்தது என்ன?

2021 ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையில் இந்திய அணி இங்கிலாந்துக்கு டெஸ்ட் சுற்றுப்பயணம் செய்த பொழுது லீட்ஸ் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக வெற்றியுடன் இங்கிருந்து தொடரை இங்கிலாந்து ஆரம்பிக்க பெரிதும் எதிர்பார்ப்பை கொண்டு இருக்கிறது.

அதே சமயத்தில் மெக்கலம் மற்றும் ஸ்டோக்ஸ் இருவரும் இங்கிலாந்தில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை அமைக்காமல், பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளங்களை அமைத்து அதிரடியாக விளையாடி வெற்றி பெற்று வருவதை வழக்கமாக உள்நாட்டில் வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆடுகளம் இப்படித்தான் இருக்கும்

எனவே இந்த முறை இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் முதல் போட்டிக்கு பேட்டிங் செய்வதற்கு தங்களுக்கு சாதகமான ஆடுகளம் வேண்டும் என இங்கிலாந்து நிர்வாகம் எதிர்பார்க்கிறது. ஆனால் இதற்கு எதிரான ஆடுகளமே முதல் போட்டிக்கு கிடைக்கும் என ஆடுகளத் தயாரிப்பாளர் ராபின்சன் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : இப்ப இந்தியாவுல ஒரு சூப்பர் ஸ்டார்தான்.. ஆனா அவர் மொத்த இங்கிலாந்து டீமுக்கும் தலைவலி – பட்லர் பாராட்டு

இதுகுறித்து ஆடுகளத் தயாரிப்பாளர் ராபின்சன் கூறும் பொழுது “இங்கிலாந்து நிர்வாகம் பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளத்தை எதிர்பார்க்கிறது. இது உண்மையும் கூட. ஆனால் என்னால் இங்கு பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளத்தை கொடுக்க முடியாத நிலைமை இருக்கிறது. தற்போது தயாராகி இருக்கும் ஆடுகளம் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக பவுன்ஸ் எடுபடும் வகையில் இருப்பதாகவே தெரிகிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by