சிஎஸ்கே ஆச்சரியப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?.. பெரிய சிக்கலில் இருக்காங்க – ஆகாஷ் சோப்ரா பேச்சு

0
91
Aakash

இன்று ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் பலம் மற்றும் பலவீனங்கள் குறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசியிருக்கிறார்.

சிஎஸ்கே அணி தங்களது சொந்த மைதானத்தில் நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றது. இதைத்தொடர்ந்து இன்னொரு பெரிய அணியான ஆர்சிபி அணியை தங்களது சொந்த மைதானத்தில் மீண்டும் சந்திக்க இருக்கிறது. எனவே இந்த போட்டிக்கு ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

- Advertisement -

ருதுராஜ் ரகசியம் ஏன்?

கடந்த போட்டியில் கேப்டன் ருதுராஜ் மூன்றாவது வரிசையில் பேட்டிங் வந்தது குறித்து பேசி இருக்கும் ஆகாஷ் சோப்ரா “சிஎஸ்கே அணி கவனம் செலுத்த வேண்டிய விஷயம் என்னவாக இருக்கும்? கடந்த போட்டியில் ருதுராஜ் மூன்றாவது வீரராக வந்து நம்மை கொஞ்சம் ஆச்சரியப்படுத்தினார். ஆனால் நாம் அவரை துவக்க ஆட்டக்காரராக எதிர்பார்த்து இருந்தோம். இந்த இடத்தில் தான் நாம் கொஞ்சம் ஆச்சரியப்பட்டோம்”

“இது ஒரு விளையாட்டு தத்துவமாக இருக்கிறதா? சிஎஸ்கே தங்களது விளையாட்டு திட்டங்களை உடனுக்குடன் மாற்றாது என்பதால் மீண்டும் இதுவேதான் தொடர போகிறதா? அவர்கள் ராகுல் திரிபாதியை வைத்து துவங்க விரும்புகிறார்கள். மேலும் ருதுராஜ் ஆட்டம் இழந்து விட்டால், ரச்சின் இறுதிவரை நின்று போட்டியை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதான திட்டம் இருக்கிறது”

- Advertisement -

சிஎஸ்கே அணியின் பிரச்சனை

“சிவம் துபே, தீபக் ஹூடா மற்றும் சாம் கரன் மூவரும் அடுத்த மூன்று இடங்களில் வருகிறார்கள். கடந்த போட்டியில் இவர்களிடமிருந்து பெரிய ரன்கள் எதுவும் வரவில்லை. எனவே மிடில் வரிசையில் இருந்து ரன்கள் வர வேண்டியது அவசியமாகிறது. இந்த மூவரில் ஒருவராவது ரன்கள் எடுக்க வேண்டும். இதுதான் சிஎஸ்கே அணியின் பிரச்சினையாக தற்பொழுது இருக்கிறது”

இதையும் படிங்க : ஹைதராபாத் ஷமிய முடிச்சு விட்டிடும்.. கம்மின்ஸால யாரும் செய்யாததை செய்ய முடியாது – மைக்கேல் வாகன் பேட்டி

“சிஎஸ்கே அணியை பொறுத்தவரை சொந்த மைதானத்தில் அவர்கள் சிறப்பாக விளையாடுவது வழக்கமானது. ஆனால் கடந்த போட்டியில் மும்பைக்கு எதிராக அவர்கள் ஒரு சிறிய ஸ்கோரை துரத்தும் பொழுது தடுமாறினார்கள். ஆரம்பத்தில் சிறப்பாக இருந்த அவர்கள் விக்னேஷ் புத்தூர் வந்ததும் விக்கெட்டுகளை இழந்தார்கள். எனவே அவர்களில் யாராவது நடுவில் நின்று பெரிய ரன்கள் அடிக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -