இந்திய கிரிக்கெட்

கேப்டன் கில்லுக்காக நாங்கள் ரோகித் விராட்டை இப்படித்தான் பயன்படுத்த போகிறோம்.. கண்டிப்பாக இதை எடுத்துக் கொள்வோம் – மோர்னே மோர்கல் பேட்டி

இந்திய அணியின் இளம் வீரர்களுக்கு சுப்மன் கில் தலைமையில் வழிகாட்ட மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் அனுபவத்தைப் பயன்படுத்த இந்திய அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

- Advertisement -

​மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்பாக, இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் இளம் வீரர்களின் முன்னேற்றத்தில் இந்த மூத்த வீரர்களின் பங்கு குறித்து முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

​சுப்மன் கில் கேப்டனாக சிறப்பாகச் செயல்பட்டு வரும் நிலையில், அணியை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லவும், இளம் வீரர்களின் சந்தேகங்களைத் தீர்க்கவும் ரோகித் மற்றும் கோலியின் வழிகாட்டுதல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என பயிற்சியாளர் கருதுகிறார்.

​இதுகுறித்து மோர்னே மோர்கல் பேசும்போது “மீண்டும் அத்தகைய அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணிக்குத் திரும்புவது எப்போதுமே சிறப்பானது. அணிக்குத் தலைமை தாங்குவதில் சுப்மன் கில் இதுவரை மிகச் சிறந்த வேலையைச் செய்துள்ளார். இருப்பினும் மூத்த வீரர்கள் அணியை எவ்வாறு உருவாக்குகிறார்கள் என்பதில் எனக்கு எப்போதுமே பெரிய நம்பிக்கை உண்டு. அணியில் உள்ள வெவ்வேறு வீரர்கள் குறிப்பிட்ட மூத்த வீரர்களுடன் பேசுவதில் வசதியாக உணருவார்கள். அந்த வகையில் பல மூத்த வீரர்களின் அனுபவம் நமக்குக் கிடைத்திருப்பது நமது அதிர்ஷ்டம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​தொடர்ந்து பேசிய அவர் “நெட்சில் பேட்டிங் செய்யும்போது, விராட் கோலியிடம் ஆலோசனைகளைப் பெறுவதும், புதிய பந்தை எதிர்கொள்வது குறித்து ரோகித் சர்மாவிடம் பேசித் தெரிந்துகொள்வதும் இளம் வீரர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். மூத்த வீரர்களுடன் உரையாடுவதற்கான அதிக வாய்ப்புகளை நாம் உருவாக்குவது அணிக்கு மிகவும் நல்லது” என்றும் கூறி இருக்கிறார்.
​

- Advertisement -
Published by

Recent Posts