இந்திய கிரிக்கெட்

ஹர்திக் பாண்டியா இந்த முறை எப்போது திரும்பி வருவார் என்று நமக்கு தெரியாது.. முக்கிய காரணம் இதுதான் – மைக்கேல் கிளார்க் பேட்டி

​இந்திய மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான தொடருக்கு முன்னதாக, இந்திய ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவின் தொடர்ச்சியான உடற்தகுதிப் பிரச்சனைகள் மற்றும் மைதானத்தில் தொடர்ந்து விளையாட இயலாத நிலை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பேசியிருக்கிறார்.

- Advertisement -

​ஹார்திக் பாண்டியா சமீபகாலமாக தொடர் காயங்களால் அவதிப்பட்டு வருவதால், ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான 50 ஓவர் தொடருக்கான இந்திய ஏ அணியில் அவரது உடற்தகுதியை நிரூபிப்பதற்காக சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால், மீண்டும் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் போட்டியிலிருந்து விலகும் சூழல் உருவாகியுள்ள நிலையில், அவரது ஃபிட்னஸ் குறித்து மைக்கேல் கிளார்க் பேசியுள்ளார்.

​ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பாண்டியா பற்றி பேசும்போது “ஹார்திக் பாண்டியாவிற்கு இந்த கம்பேக் மிகவும் கடினமாக அமைந்துவிட்டது. ஐபிஎல் தொடர் முழுவதிலும் அவர் அடுத்தடுத்து போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதில் பெரும் சீரற்ற தன்மையைக் கொண்டிருந்தார். அவர் மைதானத்தில் இறங்கி தொடர்ந்து விளையாட வேண்டிய வகை பிளேயர் ஆவார். அவருடைய ஜெனரல் ஃபிட்னஸ் நன்றாகவே உள்ளது, அவர் உடலில் அதிக வெயிட் இல்லை, மிகவும் ஸ்ட்ராங்காகவே இருக்கிறார். ஆனால் அவர் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய வேண்டும் மற்றும் ஓவர்கள் பவுலிங் செய்ய வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

​தொடர்ந்து அடுத்தடுத்து ஏற்படும் காயங்கள் குறித்து ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி பேசும்போது “நீங்கள் எவ்வளவு லீன் அல்லது ஃபேட் ஆக இருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, இன்ஜுரியும் பாடியும் இரு வேறு விஷயங்கள். ஹார்திக் பாண்டியாவைப் பார்க்கும்போது அவர் மிகவும் ஃபிட்டாகத் தெரிவார். ஆனால் நீங்கள் தொடர்ந்து காயம் அடைந்து கொண்டே இருந்தால், அது இந்திய கிரிக்கெட்டுக்கும் உலகக் கிரிக்கெட்டுக்கும் நல்லதல்ல. ஹார்திக் பாண்டியா விளையாடும் போது அனைவரும் அவரைப் பார்க்கவே விரும்புவார்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​வரவிருக்கும் உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் சிறிது காலமே உள்ள நிலையில், ஹார்திக் பாண்டியாவிற்குத் தேவையான போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காமல் போவது இந்திய அணிக்கு ஒரு பெரிய கவலையாக உருவெடுத்துள்ளது.

- Advertisement -
Published by

Recent Posts