தற்போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ட்ரெண்ட் செட்டர்களாக இந்திய அணி இருந்த வருகிறது என இங்கிலாந்து விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் பில் சால்ட் கூறியிருக்கிறார்.
இந்திய டி20 அணி தற்போது அதிரடியாக விளையாடி தொடர்ந்து வெற்றிகளை பெற்று வருவதன் மூலம் உலகெங்கும் ரசிகர்களை உருவாக்கி இருக்கிறது. மேலும் டி20 வடிவத்தில் தற்போது இந்திய அணி உலக சாம்பியன் ஆகவும் இருந்து வருகிறது.
இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளராக டிராவிட் இருந்த காலகட்டத்தில், ஒரு அணியாக இணைந்து அதிரடியாக விளையாடி வெற்றி பெறும் கலாச்சாரத்தை இந்திய கிரிக்கெட்டில் கொண்டு வந்தார்கள். இதற்கு பேட்ஸ்மேனாக ரோகித் சர்மாவே துவக்க ஆட்டக்காரராக வந்து நல்ல துவக்கத்தை ஏற்படுத்தினார்.
இதற்கு அடுத்து கம்பீர் பயிற்சியாளராக வந்ததும் அவரும் இதே அணுகுமுறையை கடைப்பிடிக்க ஆரம்பித்தார். இதன் காரணமாக தற்போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி மிகவும் சிறப்பானதாக இருக்கிறது. இந்த இடத்தில் அதிரடியாக விளையாடி வந்த இங்கிலாந்து தற்பொழுது பின்தங்கி இருக்கிறது.
இதுகுறித்து பில் சால்ட் பேசும் பொழுது “ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையில் நாங்கள் இந்திய அணியை வென்றோம். அப்போது நாங்கள் டி20 கிரிக்கெட்டின் ட்ரெண்ட் செட்டர்களாக இருந்தோம். அந்தப் போட்டியில் அலெக்ஸ் ஹலஸ் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் அதிரடியாக விளையாடினார்கள். மூன்றாவது இடத்தில் விளையாடிய எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது நாங்கள் நம்ப முடியாத வகையில் இருந்தோம்”
இதையும் படிங்க : சச்சின் இல்லை.. நம் நாட்டில் இவர் பிறந்ததற்காக நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டும் – முரளி விஜய் புகழாரம்
“இதற்கு அடுத்த டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி எங்களை தோற்கடித்தது. அந்தப் போட்டியில் அவர்கள் விளையாடிய விதம் வேறு மாதிரியாக இருந்தது. அந்த குறிப்பிட்ட மைதானத்தில் அவர்கள் அப்படி விளையாடியது ஆச்சரியமாக இருந்தது. தற்போது இந்திய அணி ட்ரண்ட் செட்டர்களாக இருக்கிறார்கள். எல்லாம் மாறிவரும் நிலையில் எதிர்காலத்தில் நாங்கள் மீண்டும் அந்த இடத்திற்கு வருவோம்” என்று கூறி இருக்கிறார்.