2026 ஆஸ்திரேலிய பிக்பேஷ் லீக் இறுதிப் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்று பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மேலும் இந்த அணியே இந்த தொடரில் அதிக சாம்பியன் பட்டத்தை வென்ற அணி ஆகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
சுருண்ட ஸ்மித் அணி
இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர ஆட்டக்காரர் ஸ்மித் 13 பந்துகளில் சிறப்பாக ஆரம்பித்து 24 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இது அந்த அணிக்கு பெரிய பின்னடைவை உருவாக்கியது.
இதைத்தொடர்ந்து ஜோஸ் பிலிப்பி 24 பந்தில் 24 ரன்கள் கேப்டன் ஹென்றிகுயிஸ் 27 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார்கள். இறுதியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 132 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. பெர்த் ஸ்காச்சர்ஸ் வந்து வீச்சில் டேவிட் பைன் மற்றும் ஜெயிலி ரிச்சக்சன் இருவரும் தலா மூன்று விக்கெட் வீழ்த்தினார்கள்.
மார்ஸ் பொறுப்பான ஆட்டம்
இதைத் தொடர்ந்து பேட்டி செய்ய வந்த பெர்த் ஸ்காச்சர்ஸ் அளித்து துவக்க ஆட்டக்காரர் மிட்சல் மார்ஸ் பொறுப்பாக விளையாடி 43 பந்தில் 44 ரன்கள் எடுத்தார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் 22 பந்தில் 36 ரன்கள் எடுத்தார். ஜோஸ் இங்லீஷ் 26 செந்தில் 29 ரன்கள் எடுக்க பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
மேலும் அந்த அணிக்கு இது ஆறாவது சாம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய டி20 லீக்குகளில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியாக இந்த அணி இருக்கிறது. ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அபிஷேக் ஷர்மாவையே மறக்க வைத்த வீரர் அவர்.. உலகில் எந்த சக்தியாலும் அவரை தடுக்க முடியாது – முகமது கைப் பாராட்டு
பிக் பேஷ் தொடரில் அதிக சாம்பியன் பட்டம் :
6- பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்
3 – சிட்னி சிக்சர்ஸ்
2- பிரிஸ்பேன் வெப்பம்
1- அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ்
1- ஹோபார்ட் ஹரிகேன்ஸ்
1 – மெல்போர்ன் ரெனிகேட்ஸ்
1 – சிட்னி தண்டர்






