தற்போது இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரராக இருந்து வரும் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்த அடியே இஷான் கிஷான் மறக்க வைத்துவிட்டார் என முகமது கைப் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இஷான் கிஷான் 32 பந்தில் 76 ரன்கள் அதிரடியாக குவித்தார். இந்த போட்டியில் அபிஷேக் ஷர்மா தான் சந்தித்த முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் தடுமாற்றம்
சில காலமாக அபிஷேக் ஷர்மா ஆட்டம் இழந்தால் இந்திய டி20 அணி தடுமாற ஆரம்பித்து இருந்தது. அவர்களால் பெரிய ஸ்கோர்க்கு செல்ல முடியாமல் சிக்கல் உருவானது. அந்த நேரத்தில் கில் மற்றும் சூரியகுமார் இருவரும் பேட்டிங் ஃபார்ம் இல்லாமல் இருந்து வந்தது மேலும் அணியை பாதித்தது.
இந்த நிலையில் அபிஷேக் ஷர்மா முதல் பந்தில் ஆட்டம் இழந்தாலும் கூட அவர் இல்லாத குறையே தெரியாத அளவுக்கு இஷான் கிஷான் அதிரடியாக விளையாடி ஆச்சரியப்படுத்தினார். மேலும் 10 ஓவருக்கு முன்னதாகவே போட்டியை மொத்தமாக இந்தியாவின் பக்கம் கொண்டு வந்து கொடுத்துவிட்டே ஆட்டம் இழந்தார்.
எந்த சக்தியாலும் தடுக்க முடியாது
இதுகுறித்து முகமது கைப் பேசும்பொழுது “நீங்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக விளையாடிய ரன்கள் எடுத்தால் நீங்கள் இந்திய அணியில் இடம் பெறுவதை உலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்பதற்கு இஷான் கிஷான் சிறந்த உதாரணமாக இருக்கிறார். அந்தப் போட்டியில் அபிஷேக் சர்மா முதல் பந்தில் ஆட்டம் இழந்ததை நாம் யாருமே நினைக்காத அளவுக்கு விளையாடியிருந்தார். உண்மையில் அது அற்புதமான பேட்டிங்”
இதையும் படிங்க : டி20 உலக கோப்பை.. பாகிஸ்தான் அணி அறிவிப்பு.. 2 முக்கிய வீரர்கள் அதிரடி நீக்கம்.. ஆச்சரியமான தேர்வு
“அவர் விளையாடிய வேகம் உண்மையில் நம்ப முடியாத அளவுக்கு இருந்தது. பவர் பிளேவில் எடுக்கப்பட்ட 75 ரன்கள் அவர் 50 ரன்னுக்கும் மேலாக எடுத்திருந்தார். அவர் உள்நாட்டு கிரிக்கெட் சிறப்பாக விளையாடி எப்படி மீண்டு வர வேண்டும் என்பதற்கு உதாரணமாக மாறி இருக்கிறார். இது அவருடைய சிறந்த மறுபிரவேசமாக அமைந்திருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.






