அபிஷேக் ஹெட்டுக்கு நான் பந்து வீசாதது மகிழ்ச்சி.. பவுலர்களை நினைச்சா வருத்தமா இருக்கு – கம்மின்ஸ் பேச்சு

0
18
Cummins

ஐபிஎல் தொடரில் பவுலர்களை நினைத்தால் வருத்தமாக உள்ளதாக பேட் கம்மின்ஸ் கூறி இருக்கிறார். நேற்று மும்பை இந்தியன்ஸ் அணி 243 ரன்கள் எடுக்க, அதை துரத்திய ஹைதராபாத் அபிஷேக் ஷர்மா மற்றும் ஹெட் அதிரடியில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் பந்துவீச்சாளர்களுக்கு சாதகம் இல்லாத சூழ்நிலையில் பெரிய ரன்கள் தொடர்ந்து அடிக்கப்படுகிறது. இதனால் பந்துவீச்சாளர்கள் மைதானத்தில் எல்லா பக்கங்களிலும் அடிக்கப்படுகிறார்கள். நேற்றும் இரண்டு அணிகளிலும் நிறைய ரன்கள் கொடுக்கப்பட்டது.

- Advertisement -

வருத்தமாக உள்ளது

தற்போது ஐபிஎல் தொடரில் ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக அமைக்கப்படுவது, பந்துவீச்சாளர்கள் சிரமப்படுவது குறித்து ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசும்போது “பவுலர்கள் குறித்து என்னிடம் நிறைய வருத்தம் இருக்கிறது. இதுபோன்று ரன்கள் எடுக்கப்படும் ஆடுகளங்களில் பவுலர்களுக்கு எதுவும் இருப்பதில்லை. ஆனால் ஆட்டத்தில் இறுதியில் கூட நீங்கள் ஒரு சிறப்பான யார்கரை வீசினால், அது ஆட்டத்தின் முடிவில் தாக்கம் செலுத்தக் கூடியதாக அமையலாம்”

- Advertisement -

இவர்கள் சிறப்பாக உள்ளார்கள்

“சிறந்த பந்துவீச்சாளர்கள் குறிப்பாக எங்கள் அணியில் உள்ள இஷான் மலிங்கா இந்த போட்டியில் வெல்வதற்கு முக்கிய காரணம். அவரே நீலத் தொப்பியையும் வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். உங்களால் எப்போது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். தற்போதைக்கு எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. எனவே தொடர்ந்து நம்பிக்கையுடன் இருங்கள்”

இதையும் படிங்க: எங்களை பாதிச்சது பனி இல்லை.. நாங்க மோசமா அந்த வேலையை செஞ்சோம்.. அதான் வெளுத்து விட்டாங்க – ஹர்திக் பாண்டியா வருத்தம்

“இந்த ஆடுகளம் நன்றாக இருந்தது. எங்களுடைய தொடக்க ஆட்டக்காரர்கள் அபிஷேக் மற்றும் ஹெட் இருவரிடமும் பல சாட் இருக்கிறது. நான் அவர்களுக்கு பந்து வீச வேண்டியது இல்லை என்பது மகிழ்ச்சியாக உள்ளது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -