எங்களை பாதிச்சது பனி இல்லை.. நாங்க மோசமா அந்த வேலையை செஞ்சோம்.. அதான் வெளுத்து விட்டாங்க – ஹர்திக் பாண்டியா வருத்தம்

0
13
Hardik

நேற்று ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வி அடைந்தது. இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசியிருக்கிறார்.

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி சிறப்பாக விளையாடி 243 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் 260 ரன்கள் எடுக்க கூடிய இடத்திலும் இருந்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய ஹைதராபாத் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடி துவக்கம் தர எளிதாக 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

நாங்கள்தான் தவறு செய்தோம்

இதுகுறித்து ஹர்திக் பாண்டியா பேசும் போது “எங்களை ஆட்டத்தில் பனிப்பொழிவு எதுவும் பாதிக்கவில்லை. அவர்கள் சில நல்ல ஷாட் விளையாடினார்கள். நாங்கள் சில மோசமான பந்துகளை வீசினோம். அதனால் அவர்கள் வேகமாக அடிக்க ஆரம்பித்தார்கள். நாங்கள் பின்னர் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தாலும் அது எங்களுக்கு போதுமானதாக இல்லை”

“அதே சமயத்தில் இன்று நான் மைதானத்தில் மகிழ்ச்சியுடன் விளையாடுவோம். 244 ரன்கள் என்கின்ற போது அதை எங்களால் பாதுகாக்க முடியும் என்கின்ற நம்பிக்கை என்னிடம் இருந்தது. ஆனால் இன்று எங்களால் அதை செய்ய முடியாமல் போய்விட்டது. தனிப்பட்ட முறையில் பந்துவீச்சை நான் ரசித்தேன்”

- Advertisement -

இதுதான் பிரச்சனை

“பீல்டிங்கில் சில வாய்ப்புகள் தவறியது. இந்த தொடர் முழுக்க அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் அதிர்ஷ்டமும் வேகமும் நமக்கு கிடைக்காமல் போகிறது. நமக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்த வேண்டும். இருந்தாலும் எங்கள் வீரர்கள் சிறப்பாக முயற்சி செய்தார்கள் அது கை கூடவில்லை”

இதையும் படிங்க: இந்த மாதிரி தப்பை மும்பை இந்தியன்ஸ் செஞ்சா.. கடவுளால் கூட உங்களை காப்பாற்ற முடியாது – முன்னாள் இந்திய வீரர் ஆதங்கம்

“நான் என்னுடைய பவுலர்களை குறை சொல்ல மாட்டேன். எங்களிடம் இந்த முறை நிறைய ஆப்ஷன்கள் இல்லை. என்ன மாதிரியான மாற்றங்கள் செய்யலாம் என்று கண்டுபிடிக்க வேண்டும். ஒரு அணியாக சேர்ந்து எப்படி விளையாடுவது என்பதை நாங்கள் காட்ட வேண்டும். நாங்கள் சீக்கிரத்தில் தீர்வு கண்டுபிடிப்போம் என்று நம்புகிறேன்” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -