புதர் மாதிரி பிட்ச் இருக்கணும்.. இந்த முறை இந்திய அணிக்கு இப்படித்தான் கொடுப்போம் – பேட் கம்மின்ஸ் பேட்டி

0
390
Cummins

அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே துவங்க இருக்கும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு ஆடுகளம் எப்படி அமைக்கப்படலாம்? என்பது குறித்து ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் கருத்து கூறியிருக்கிறார்.

இந்திய அணி அடுத்த மாதம் நவம்பர் 22 ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அவர்களது மண்ணில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு இரண்டு அணிகளுக்குமே இந்த தொடர் முக்கியமானதாக அமைகிறது.

- Advertisement -

சமீப இந்திய அணியை வைத்து புதிய வியூகம்

தற்போது ஆடுகளத்தில் ஈரப்பதம் இருந்து வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலை காணப்பட்டால் இந்திய அணி தடுமாறுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இப்படித்தான் ஆட்டம் இழந்து இருந்தது.

எனவே ஆஸ்திரேலியாவில் நல்ல பவுன்ஸ் கொண்ட வேகமும் கொண்ட ஆடுகளத்தை அமைத்து இந்திய அணியை மடக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் திட்டமிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஆடுகளத்தில் நிறைய புற்கள் காணப்படலாம் என்றும் கிரிக்கெட் உள்ளவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

- Advertisement -

புதர்போல இருக்க வேண்டும்

இது குறித்து பேட்டியளித்த கம்மின்ஸ் கூறும்பொழுது ” எப்படி ஆடுகளம் வேண்டும் என்று என்னை கேட்டால் நமக்கு பின்புறமாக இருக்கும் புதூர் போல ஆடுகளம் இருக்க வேண்டும் என்று சொல்வேன். தற்போது ஆஸ்திரேலியாவில் ஆடுகளங்கள் பேட்ஸ்மேன் சதம் அடிக்கக்கூடிய வகையிலும் அதே சமயம் விக்கெட் எடுக்கக் கூடிய அளவிலும் சமமாகவே இருந்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆடுகளம் தட்டையாகவே இருந்தது. இதில் நான் தலையிடுவதில்லை. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்”

இதையும் படிங்க : வேதனையிலும் ஆறுதல் அளித்த ஜெய்ஸ்வால்.. தொடக்க வீரராக சாதனை.. சச்சின் சேவாக் சாதனையை முறியடிக்க வாய்ப்பு.. முழு விபரம்

“பேட் மற்றும் பந்து என இரண்டுக்கும் சமநிலையில் இருக்கும் படி ஆடுகளம் கிடைக்கலாம். இந்திய சுழற் பந்துவீச்சிக்கும் சாதகம் கிடைக்கலாம். கடந்த இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் டெல்லி டெஸ்டை நாங்கள் வென்று இருக்க வேண்டும். அந்த அளவிற்கு ஆடுகளம் இரண்டு அணிகளுக்குமே சமமாக இருந்தது. பொதுவாகவே இப்படியான ஆடுகளங்களே அமைக்கப்படும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -