வேதனையிலும் ஆறுதல் அளித்த ஜெய்ஸ்வால்.. தொடக்க வீரராக சாதனை.. சச்சின் சேவாக் சாதனையை முறியடிக்க வாய்ப்பு.. முழு விபரம்

0
293

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 259 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்க, அதைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் ஒரு சிறப்பான சாதனையை பதிவு செய்து இங்கிலாந்து ஜாம்பவான் ஜோ ரூட்டிற்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்.

- Advertisement -

தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் படைத்த சாதனை

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் விளையாடி வரும் சூழ்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சில் 259 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது.

இதற்குப் பிறகு 16 ரன்கள் உடன் இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணிக்கு நியூசிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதில் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 30 ரன்கள் குவிக்க, கில் முப்பது ரன்களும், ஜடேஜா 38 ரன்களும் அதிகபட்சமாக குவித்தனர். இதனால் இந்திய அணி 156 ரன்கள் மட்டுமே குவித்தது.

- Advertisement -

சச்சின், சேவாக் சாதனையை முறியடிக்க வாய்ப்பு

இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் இந்த காலண்டர் ஆண்டில் 1000 ரன்கள் கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். 60 பந்துகளை எதிர்கொண்டு நான்கு பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்த நிலையில் கிளேன் பிலிப்ஸ் பந்துவீச்சில் வெளியேறினார். 10 போட்டிகளில் விளையாடி 1007 ரன்கள் குவித்து ஜெய்ஸ்வால் இரண்டாவது இடத்தில் இருக்கும் நிலையில் முதலிடத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூட் 14 போட்டிகளில் விளையாடி மொத்தமாக இந்த காலண்டர் ஆண்டில் 1305 ரன்கள் குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:விராட் கோலி ஆட வரதுக்கு முன்னாடி பெரிய தப்பு பண்ணிட்டாரு.. நிலைமை மோசமா இருக்கு – அனில் கும்ப்ளே கருத்து

மேலும் இந்த ஆண்டு ஜெய்ஸ்வாலுக்கு இன்னும் ஐந்து போட்டிகள் மீதம் இருக்கும் நிலையில் 2010 ஆம் ஆண்டு 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1562 ரன்கள் குவித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க ஜெய்ஸ்வாலுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இது அமைந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் 2008ஆம் ஆண்டு தொடக்க ஆட்டக்காரராக வீரேந்திர சேவாக் 1462 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -