கிட்டத்தட்ட 1500 நாட்களாக இருந்த நம்பர் 1 இடத்தை பறிகொடுத்த பாட் கம்மின்ஸ்; 40 வயதில் முதலிடம் பிடித்த வீரர்!

0
6780

கிட்டத்தட்ட 1500 நாட்களாக இருந்த நம்பர் 1 இடத்தை பறிகொடுத்துள்ளார் பாட் கம்மின்ஸ். மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு வந்துள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி மற்றும் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி இரண்டும் முடிவுற்றவுடன் ஐசிசி தரவரிசை பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.

- Advertisement -

அணிகளின் தரவரிசையில், ஆஸி., அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்றதும் இந்திய அணி முதல் இடத்திற்கு முன்னேறியது. இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்றதால் வலுவான நிலையில் முதலிடத்தில் நீடிக்கிறது.

பேட்டிங்கை தரவரிசை பொறுத்தவரை, ரோகித் சர்மா ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். வேறு எந்த இந்திய பேட்ஸ்மேனும் முதல் 10 இடங்களுக்குள் இல்லை.

பந்துவீச்சாளர்கள் தரவரிசை பொறுத்தவரை, கிட்டத்தட்ட 1470 நாட்களாக முதல் இடத்தில் நீடித்து வந்த ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் இரண்டு இடங்கள் பின்தங்கி 3ம் இடத்தில் இருக்கிறார். முதல் இடத்தில் 866 புள்ளிகளுடன் ஜேம்ஸ் ஆண்டர்சன் இருக்கிறார். நியூசிலாந்து அணிக்கு எதிராக இவர் அபாரமாக செயல்பட்டதால் புள்ளிகள் கூடுதல் பெற்று முன்னேறியுள்ளார்.

- Advertisement -

இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்றாம் இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவர் 864 புள்ளிகளுடன் இருக்கிறார். முதல் இரண்டு இடங்களுக்கும் இடையே இரண்டு புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் இருக்கிறது. அடுத்து வரும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் அபாரமாக செயல்படும் பட்சத்தில் அவரால் முதல் இடத்திற்கு முன்னேற முடியும். மேலும், பும்ரா 5வது இடத்திலும், ஜடேஜா 9வது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில், ஏழாவது இடத்தில் இருந்த அக்சர் பட்டேல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பேட்டிங் பவுலிங் இரண்டிலும் அபாரமாக செயல்பட்டதால் இரண்டு இடங்கள் முன்னேறி தற்போது ஐந்தாவது இடத்திற்கு வந்துள்ளார். ரவீந்திர ஜடேஜா முதல் இடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாம் இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றனர்.