இன்று இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா புதிய உலகச் சாதனை படைத்திருக்கிறார்.
தற்போது இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசிப் போட்டி ஹோபர்ட் மைதானத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த போட்டியில் இந்தியா வென்றால் தொடரை வெல்லும். ஆஸ்திரேலியா வென்றால் தொடரை சமன் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிர்ஷ்டம் இல்லாத இந்தியா
இன்று வானம் மேகமூட்டமாக காணப்பட்ட நிலையில் இந்திய அணி டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டது. தொடர்ந்து இந்த தொடரில் இந்திய அணி டாஸ் தோற்று வருகிறது. மொத்தம் எட்டு போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே டாஸ் வென்று இருக்கிறது.
இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு தற்போது அபிஷேக் ஷர்மா 13 பந்தில் 23 ரன்கள், துணை கேப்டன் சுப்மன் கில் 16 பந்தில் 29 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். 4.5 ஓவரில் விக்கெட் இழப்பில்லாமல் 52 ரன்கள் எடுத்திருக்கிறது.
அபிஷேக் ஷர்மா உலகச் சாதனை
இந்த போட்டியில் 23 ரன்கள் எடுத்த அபிஷேக் ஷர்மா மிகக் குறைந்த பந்துகளில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் ஆயிரம் ரன்கள் எடுத்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்தார். தனது 27வது போட்டியில் ஆயிரம் ரன்கள் எடுத்து அதிவேகமாக சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் எடுத்த இந்திய வீரராக விராட் கோலியுடன் சாதனையை பகிர்ந்து கொண்டார்.
இதற்கு முன்பாக முதல் இடத்தில் இந்திய கேப்டன் சூரியகுமார் யாரும் 573 பந்துகளில் முதல் ஆயிரம் கண்கள் எடுத்திருந்தார். தற்போது அபிஷேக் ஷர்மா 528 பந்துகளில் இந்த சாதனையை முறியடித்து இருக்கிறார். நடுவில் டிம் டேவிட் 569 பந்துகளில் முதல் ஆயிரம் ரன்கள் எடுத்திருந்தாலும், அவர் டெஸ்ட் அங்கீகாரம் பெற்ற நாடுகளுக்கு எதிராக மட்டுமே விளையாடி எடுக்கவில்லை. அவர் அசோசியேட் நாடுகள் உடனும் விளையாடி இருக்கிறார்.
இதையும் படிங்க: சூர்யா இதை செய்யாதீங்க.. கிரிக்கெட்ல இப்படி ஒரு விதி இல்ல.. உலகக் கோப்பை கிடைக்காது – கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து
எதிர்கொண்ட பந்துகளில் வேகமாக 1000 டி20 ரன்கள் :
528 அபிஷேக் சர்மா
573 சூர்யகுமார் யாதவ்
599 பில் சால்ட்
604 க்ளென் மேக்ஸ்வெல்
609 ஆண்ட்ரே ரஸல் / ஃபின் ஆலன்






