தற்போது இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சனை பதினோராவது இடத்தில் அனுப்பவும் வாய்ப்புகள் உள்ளது என இந்திய அணி நிர்வாகத்தை கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்திய டி20 அணியில் துவக்க வீரராக விளையாடி மூன்று சதங்கள் சஞ்சு சாம்சன் அடித்த போதும் கூட அவரை மீண்டும் ஐந்தாவது இடத்துக்கு இந்திய அணி நிர்வாகம் அனுப்பி விட்டது. இது குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.
11வது இடத்தில் அனுப்புவார்கள்
இது குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும்பொழுது ” மிகவும் துரதிர்ஷ்டமான ஒரு நபர் சஞ்சு சாம்சன். அவர் மூன்று சதங்கள் அடித்து இருந்தார். ஆனால் தற்போது அவரை மூன்று முதல் ஐந்தாவது இடம் வரையில் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வாய்ப்பு அமைந்தால் அவரை 11வது இடத்திலும் அனுப்புவார்கள். டாப் ஆர்டரில் சிறப்பாக செயல்பட்ட சஞ்சு சாம்சன் நிச்சயம் இதற்காக மனம் வருத்தப்படுவார். ஆனால் அவர் அமைதியாக இருந்து அணி நிர்வாகம் கேட்கும் இடத்தில் விளையாடுவதை தவிர வேறு வழியில்லை”
“ஒரே நல்ல விஷயம் என்னவென்றால், அவர் ஆசிய கோப்பையில் ஐந்தாவது இடத்தில் சிறப்பாக செயல்பட்டது நல்ல விஷயமாக இருக்கிறது. ஏனென்றால் அவர் டி20 உலக கோப்பைக்கு முதல் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட போகிறார்”
ஹர்திக் பாண்டியா வந்துவிடுவார்
“தற்போது காயத்தில் இருக்கும் ஹர்திக் பாண்டியா குணமடைந்து வந்தால் இந்த அணியில் ஹர்சித் ராணா இடத்தில் சேர்ந்து விடுவார். மேலும் மூன்று சுழல் பந்துவீச்சாளர்கள் விளையாட வேண்டி இருக்கின்ற காரணத்தினால், அர்ஸ்தீப் சிங் மீண்டும் தன்னுடைய இடத்தை இழக்க வேண்டியது வரும்”
இதையும் படிங்க : ஆஸி 2வது டி20.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. அந்த வீரர் தேவையில்லாத சுமை.. கம்பீர் மாற்றுவாரா?
“சிவம் துபே விளையாடிய போட்டிகளில் எல்லாம் இந்திய அணி வெற்றி பெற்று இருக்கின்ற காரணத்தினால் நிச்சயம் அவரை வெளியே அனுப்ப மாட்டார்கள். அவர் மிதவேகப்பந்து வீச்சிலும் விக்கெட் கைப்பற்றி விடுகிறார். எனவே அவர் ஆறாவது இடத்தில் இருப்பார். கிட்டத்தட்ட டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணி செட் ஆகிவிட்டது” என்று கூறியிருக்கிறார்.






