துபாயில் நடைபெற்ற ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி தென்னாப்பிரிக்க அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இந்த சூழ்நிலையில் உலகக் கோப்பையைக் கைப்பற்றிய நியூசிலாந்து அணி முதல் பத்தாவது இடத்தில் இருக்கும் ஸ்காட்லாந்து அணி வரை வென்ற பரிசுத் தொகை உள்ளிட்ட தகவல்கள் தற்போது வெளிவந்திருக்கின்றன.
நியூசிலாந்து அணி சாம்பியன்
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வந்த நிலையில் இதில் இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றிலேயே வெளியேறியது.இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் அரையிறுதியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் இறுதிப் போட்டியில் மோதின.
இதில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 158 ரன்கள் குவிக்க அதற்கு பிறகு களம் இறங்கிய தென்னாபிரிக்க அணி ஒன்பது விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் மட்டுமே குவித்ததால் 32 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி சாம்பியன் நியூசிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது. இதில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்து அணியின் அமிலியா கேர் 43 ரன்கள் குவித்து ஆட்டநாயகி விருதினை வென்றார்.
பத்து அணிகளுக்கும் வழங்கப்பட உள்ள பரிசுத்தொகை
மேலும் தென் ஆப்பிரிக்கா அணியில் லாரா வோல்வாட் 223 ரன்கள் குவித்து இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். மேலும் இந்த தொடரில் 6 இன்னிங்ஸ்கலில் மொத்தமாக 15 விக்கெட்டுகள் வீழ்த்திய நியூசிலாந்து அணியின் அமிலியா கெர் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார். மேலும் இந்த தொடரில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணிக்கு பரிசுத்தொகையாக 21.40 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. தோல்வி அடைந்த தென்னாபிரிக்க அணிக்கு 11.56 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஐபிஎல் 2025..தோனி வைத்த 10 நாள் செக்.. இறுதி முடிவு என்ன?. சிஎஸ்கே சிஇஓ வெளியிட்ட சூசக தகவல்.. முழு விபரம்
இதில் அரையிறுதியில் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு 7.66 மற்றும் 7.40 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்தாவது இடம் பிடித்த இங்கிலாந்து அணிக்கு நான்கு கோடியும், ஆறாவது இடம் பிடித்த இந்திய அணிக்கு 3.74 கோடியும் வழங்கப்பட உள்ளது. மேலும் ஏழு மற்றும் எட்டாவது இடங்களில் இருக்கும் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு 3.47 கோடி ரூபாயும், ஒன்பதாவது மற்றும் பத்தாவது இடத்தில் இருக்கும் ஸ்ரீலங்கா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு தலா 2.08 கோடி ரூபாயும் வழங்கப்பட உள்ளது.