பாண்டியா54 ரோஹித் 100! கில் 112! அபாரம் – நியூசிலாந்துக்கு 386 இலக்கு நிர்ணயித்தது இந்தியா !

0
552

இலங்கை அணியுடன் போட்டித் தொடர்களை அடுத்து தற்போது நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது . மூன்று போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களை வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது .

இன்று மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்று வருகிறது. டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் கில் ஆகியோர் அபாரமான துவக்கத்தை இந்திய அணிக்கு ஏற்படுத்தி கொடுத்தனர் . முதலாவது விக்கெட்டுக்கு இவர்கள் இருவரும் ஜோடியாக 212 ரன்களை சேர்த்தனர் .

- Advertisement -

சிறப்பாக ஆடிய கேப்டன் ரோகித் சர்மா 83 பந்துகளில் தனது சதத்தை நிறைவு செய்தார். இது ஒரு நாள் போட்டியில் அவர் அடிக்கும் 30 வது சதமாகும் . 12 பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்களின் உதவியுடன் நூறு ரண்களை எடுத்திருந்தார் ரோகித் சர்மா. மறுமுனையில் சிறப்பாக ஆடிய கில் இந்தத் தொடரில் தனது இரண்டாவது சதத்தை நிறைவு செய்தார் . 74 பந்துகளில் சதம் அடித்த கில் 112 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதில் 13 பவுண்டரிகளும் நான்கு சிக்ஸர்களும் அடங்கும் .

அதன் பிறகு களம் இறங்கிய விராட் கோலி ஆரம்பம் முதலே வேகமாக ரன்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டார் . விராட் கோலி 27 பந்துகளில் 36 ரன்களுடனும் இசான் கிசான் 17 ரன்களிலும் சூரியகுமார் யாதவ் 14 ரணகளிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். ஹர்திக் பாண்டியா உடன் இணைந்த வாஷிங்டன் சுந்தரும் நிலைத்து நின்று ஆடவில்லை .

இறுதியில் ஹர்திக் பாண்டியா மற்றும் சர்துல் தாகூர் ஆகியோர் அதிரடியாக ஆடி இந்திய அணியின் ஸ்கோர் 375 க்கு மேல் எடுக்க உதவினர். அதிரடியாக ஆடிய ஹர்திக் பாண்டியா 38 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் . இதில் மூன்று சிக்ஸர்களையும் மூன்று பவுண்டரிகளையும் அடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது . இவருடன் ஆடிய சார்புல் தாக்கூர் 17 பந்துகளில் மூன்று பவுண்டரிகளும் மற்றும் ஒரு சிக்சருடன் 25 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இறுதியாக இந்திய அணி ஐம்பது ஓவர்களில் 385 ரன்கள் எடுத்து ஒன்பது விக்கெட்டுகளை இழந்திருந்தது.

- Advertisement -

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் ஜேக்கப் 100 ரண்களை கொடுத்து மூன்று விக்கெட்டுகளையும் டிக்னர் 75 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். பிரேஸ்வெல் ஒரு விக்கெட் கைப்பற்றினார். நியூசிலாந்து அணி ஒயிட் வாஷை தவிர்க்க 386 ரன்கள் எடுக்க வேண்டும் .