இங்கிலாந்து அணிக்கு எதிராக நாளை முல்தான் மைதானத்தில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தானுக்கு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இங்கிலாந்து அணி வந்திருக்கிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாளை முல்தான் மைதானத்தில் தொடங்குகிறது.
சோகமான கடந்த வரலாறு
கடந்த முறை பென் ஸ்டோக்ஸ் தலைமையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட பாகிஸ்தான் வந்த இங்கிலாந்து அணி தொடரை முழுமையாக கைப்பற்றியது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக பாகிஸ்தானில் இங்கிலாந்தின் மிகச் சிறப்பான டெஸ்ட் செயல்பாடாக அது அமைந்தது.
மேலும் கடந்த ஆயிரம் நாட்களுக்கும் மேலாக பாகிஸ்தான் அணி எந்த ஒரு டெஸ்ட் போட்டியிலும் வெல்லாமல் இருந்து வருகிறது. உள்நாட்டில் கடைசியாக பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் மொத்தமாக இழந்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி நெருக்கடியில் இருக்கிறது.
சூப்பர் ஸ்டார் வீரர் வருகை
இந்த நிலையில் இளம் சூப்பர் ஸ்டார் ஆல் ரவுண்டர் அமீர் ஜமால் காயத்திலிருந்து திரும்ப வந்திருக்கிறார். மேலும் ஷாகின் அப்ரிடி மற்றும் நசீம் ஷா இருவரும் இடம் பெற்று இருக்கிறார்கள். துவக்க ஆட்டக்காரர் அப்துல்லா சபீக் மீண்டும் வாய்ப்பு பெற்றிருக்கிறார். அதே சமயத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய வேகப்பந்து பேச்சாளர்கள் குரர்ரம் சேஷாத், அமீர் ஹம்சா இருவரும் தேர்வு செய்யப்படவில்லை. இது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க : 28 பந்தில் சின்ன தல ரெய்னா ருத்ர தாண்டவம்.. ஷாகிப் ஓவரில் பறந்த பந்துகள்.. அமெரிக்காவில் அதிரடி ஆட்டம்
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் பிளேயிங் லெவன்:
அப்துல்லா ஷபிக்
ஷான் மசூத் (கே)
பாபர் அசாம்
சவுத் ஷகீல்
முகமது ரிஸ்வான் (வி. கீ)
சல்மான் அலி ஆகா
அமீர் ஜமால்
ஷஹீன் ஷா அப்ரிடி
நசீம் ஷா
அப்ரார் அகமது