மொக்க பிட்ச்.. அதான் ஐபிஎல் இந்திய பசங்க கலக்குறாங்க – பாகிஸ்தான் ஜுனைட் கான் விமர்சனம்

0
1086
Junaid

இந்திய அணி நேற்று ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்ததற்கு சரியான பதிலடியைத் திருப்பிக் கொடுத்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருக்கும் அபிஷேக் ஷர்மா மற்றும் ருதுராஜ் இருவரையும் வேலை செய்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜுனைட் கான் பேசியிருக்கிறார்.

நேற்றைய போட்டியில் கேப்டன் கில் இரண்டாவது ஓவரில் ஆட்டம் இழந்து வெளியேறிவிட, இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த அபிஷேக் ஷர்மா மற்றும் ருதுராஜ் இருவரும் சேர்ந்து 76 பந்துகளில் 137 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். அபிஷேக் ஷர்மா 47 பந்துகளில் 100 ரன்கள், ருதுராஜ் 47 பந்தில் 77 ரன்கள் மற்றும் ரிங்கு சிங் 22 பந்தில் 48 ரன்கள் எடுத்தார்கள்.

- Advertisement -

இந்தப் போட்டிக்கு முதல் போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட ஆடுகளமே பயன்படுத்தப்பட்டிருந்தது. மேலும் முதல் போட்டியில் இரண்டு அணிகளும் 120 ரன்களை தொடவில்லை. ஆடுகளத்தில் ஆரம்ப நிலையில் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு உதவி இருந்தது. அடுத்து ஆடுகளம் இரட்டை வேகத்தில் ஸ்பாஞ்ச் பவுன்ஸ் கொண்டதாக இருந்தது.

பொதுவாக இந்த வகையான ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது கடினமான ஒன்று. இதன் காரணமாக இந்திய அணி பவர் பிளேவில் ஆறு ஓவர்களுக்கு 36 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அடுத்து அபிஷேக் ஷர்மா திறமையாக அடித்து விளையாட செய்யவே இந்திய அணிக்கு ஸ்கோர் வர ஆரம்பித்தது. உண்மை நிலை இப்படியாக இருக்க பாகிஸ்தான் முன்னால் வேகப்பந்து வீச்சாளர் ஜுனைட் கான் இந்திய பேட்ஸ்மேன்களை கேலி செய்து பேசியிருக்கிறார்.

- Advertisement -

ஜுனைட் கான் இது குறித்து தன்னுடைய ட்வீட்டில் ” அபிஷேக் ஷர்மா மற்றும் ருதுராஜ் நன்றாக பேட்டிங் செய்தார்கள். ஐபிஎல் ஆடுகளம் போல இந்த ஆடுகளமும் இருந்தது இந்திய பேட்டர்களுக்கு ஏற்றது போல் தெரிகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார். இதன் மூலம் ஆடுகளம் சுமாராக இருந்தது, அதனால் சிறப்பாக விளையாடினார்கள் என்று கூறி இருக்கிறார். இந்த முறை ஐபிஎல் ஆடுகளங்கள் ஆரம்பத்தில் சுமாராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 3 விஷயங்கள் இல்லனா.. டீமை விட்டு வெளியே அனுப்பிடுவேன் – பாகிஸ்தான் டெஸ்ட் கோச் கில்லெஸ்பி பேட்டி

அதே சமயத்தில் பாகிஸ்தான் நடக்கும் பிஎஸ்எல் டி20 லீக்கில் தார் ரோடு போன்ற ஆடுகளம்தான் அமைக்கப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கே தார் ரோடு போன்ற ஆடுகளம் அமைத்து 500 முதல் 600 ரன்கள் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுவாகவே அங்கு அப்படியான ஆடுகளம் மட்டுமே இருக்கிறது. இந்த நிலையில் ஜுனைட் கான் இப்படி பேசி இருப்பது குறித்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக எதிர்வினை செய்து வருகிறார்கள்!

- Advertisement -