பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு வெள்ளைப்பந்தில் தலைமை பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவின் கேரி கிரிஸ்டன் மற்றும் சிவப்புப்பந்துக்கு ஆஸ்திரேலியாவின் ஜேசன் கில்லெஸ்பி என இரண்டு புதிய பயிற்சியாளர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்திருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஜேசன் கில்லெஸ்பி பாகிஸ்தான் வீரர்களுக்கு அதிரடி எச்சரிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார்.
கடந்த சில வருடங்களாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற பெரிய அணிகள் பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட ஆரம்பித்திருக்கின்றன. இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கணிசமாக வருமானம் உயர்ந்திருக்கிறது.
அதே சமயத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் திறமை மிகவும் கீழே சரிந்து இருக்கிறது. மேலும் அணி வீரர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லாமல் இருப்பதோடு அவர்களுக்கு அடிப்படையில் உடல் தகுதி இல்லாமலும் இருக்கிறார்கள். மேலும் அவர்களுடைய உள்நாட்டு கிரிக்கெட் கட்டமைப்பும் பலவீனமாக இருக்கிறது.
இதன் காரணமாக சர்வதேச மட்டத்தில் பாகிஸ்தான் அணி பெரிய தோல்விகளை சந்தித்து வருகிறது. நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் கத்துக்குட்டி அமெரிக்க அணி இடம் தோல்வி அடைந்து முதல் சுற்றில் வெளியேறியது. இந்த நிலையில் பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேத பந்துவீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி வெளிப்படையான எச்சரிக்கை ஒன்றை பாகிஸ்தான் வீரர்களுக்கு கூறியிருக்கிறார்.
இதுகுறித்து ஜேசன் கில்லெஸ்பி பேசும்பொழுது “ஒரு தேசிய அணியில் ஒரு வீரர் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இல்லை என்றால் அவருடைய மதிப்பு கேள்விக்குறியாக மாறுகிறது. ஒரு வீரரை பற்றி ஏதேனும் கருத்துக்கள் வெளியில் இருந்தால், அதை அந்த குறிப்பிட்ட வீரர் தன்னுடைய செயல் திறனின் மூலமாக மட்டும்தான் மாற்ற வேண்டும்.என்னுடைய தராக மந்திரம் என்னவென்றால் உடல் பிட்டாக, ஆரோக்கியமாக, வலிமையானதாக இருக்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமில்லாமல் நவீன கிரிக்கெட்டில் இது மிக அவசியம். இல்லையென்றால் அணியில் விளையாட முடியாது.
இதையும் படிங்க : ஜிம்பாப்வே தொடர்.. சாய் சுதர்சனுக்கு நடந்த சோகம்..இந்த முடிவு நியாயமா?.. ரசிகர்கள் கோபம்
பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை அவர்கள் யாரையும் காப்பி அடிக்காமல், தங்களுடைய பாணியில் விளையாடி அவர்கள் அவர்களுக்கு என்று ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும். எனக்குத்தெரிந்த விஷயம் என்னவென்றால், பாகிஸ்தான் அணியிடம் நன்றாகச் செயல்படும் திறமை இருக்கிறது, ஆனால் இவர்கள் தொடர்ந்து நன்றாக செயல்படுவதற்கு இவர்களை ஒன்றாக இணைப்பது தான் முக்கிய வேலை” என்று கூறி இருக்கிறார்.