டி20 உலககோப்பை.. பாகிஸ்தான் அணியை வெளியிட்டது.. 7 ஸ்பெஷல் வீரர்கள் சிறப்பு.. அதிரடி திட்டம்

0
2112
Pakistan

இந்த ஆண்டு அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் என இரு நாடுகளில் நடக்க இருக்கும் டி20 உலக கோப்பைக்கு 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த அணியில் ஏழு வீரர்கள் புதியதாகவும் ஓய்வுக்குப் பிறகும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

தற்போது பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பைக்கு 15 பேர் கொண்ட அணியை அறிவித்திருக்கிறது. இந்த அணியை கேப்டனாக பாபர் அசாம் வழி நடத்துகிறார். மேலும் காயத்தால் விளையாட முடியாமல் இருந்த அதிவேக பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவுப் மீண்டும் அணியில் இடம் பெற்று இருக்கிறார்.

- Advertisement -

மேலும் கடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை தவறவிட்ட இளம் வேகப்பந்துவீச்சாளர் நசிம் ஷா இந்த முறை திரும்பி வந்திருக்கிறார். இவருடன் வேகப்பந்து வீச்சை வலுப்படுத்த நட்சத்திர வீரர் ஷாகின் ஷா அப்ரிடி இருக்கிறார்.

தற்பொழுது இந்த அணிக்கு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்திருந்த இமாத் வாசிம் மற்றும் முகமது ஆமீர் இருவரும் திரும்ப வந்திருக்கிறார்கள். இத்துடன் புதிதாக விக்கெட் கீப்பர் அசாம் கான், சுழல் பந்துவீச்சாளர் அப்ரார் அகமது, வேகப்பந்துவீச்சாளர் அப்பாஸ் அப்ரிடி, இளம் தொடக்க ஆட்டக்காரர் சையும் அயூப் மற்றும் அதிரடி இளம் ஆட்டக்காரர் உஸ்மான் கான் என மொத்தம் புதிய திட்டத்தின் படி ஏழு வீரர்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அறிக்கையில் “இது மிகவும் திறமையான மற்றும் சமநிலை கொண்ட அணியாகும். இந்த அணி இளமை மற்றும் அனுபவத்தின் கலவையாக இருக்கும். இந்த வீரர்கள் சில காலமாக ஒன்றாக விளையாடி அடுத்த ஒரு மாதம் விளையாடுவதற்கு நன்றாக செட்டில் ஆகி விட்டார்கள்.

- Advertisement -

ஹாரிஸ் ரவூப் நல்ல முறையில் உடல் தகுதியை எட்டி விட்டார். அவர் வலையில் மிகச் சிறப்பாக பந்து வீசுகிறார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவர் விளையாடி இருக்க வேண்டியது ஆனால் மழையின் காரணமாக போட்டி நடக்கவில்லை.டி20 உலகக் கோப்பையில் மற்ற பாகிஸ்தான் ஸ்ட்ரைக் பந்து வீச்சாளர்களுடன் அவரும் இணைந்து விளையாடுவார்” என்று கூறப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க : ஐபிஎல்-ல் இருந்து ஓய்வு.. டி20 உலக கோப்பைக்கு வித்தியாசமாக செல்லும் தினேஷ் கார்த்திக்.. ஐசிசி அறிவிப்பு

2024 டி20 உலகக்கோப்பைக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி :

பாபர் அசாம் (கேப்டன்), அப்ரார் அகமது, அசம் கான், ஃபகார் ஜமான், ஹாரிஸ் ரவுஃப், இப்திகார் அகமது, இமாத் வாசிம், முகமது அப்பாஸ் அப்ரிடி, முகமது அமீர், முகமது ரிஸ்வான், நசீம் ஷா, சைம் அயூப், ஷதாப் கான், ஷஹீன் ஷாஹ்மான் அப்ரிடி மற்றும் உஸ்மான் கான்.