ஐபிஎல்-ல் இருந்து ஓய்வு.. டி20 உலக கோப்பைக்கு வித்தியாசமாக செல்லும் தினேஷ் கார்த்திக்.. ஐசிசி அறிவிப்பு

0
1364
DK

நடப்பாண்டு ஐபிஎல் தொடருடன் ஆர்சிபி அணிக்காக விளையாடி வந்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டார். இந்த நிலையில் அவர் ஒரு புதிய பொறுப்பில் டி20 உலகக் கோப்பைக்கு செல்ல இருக்கிறார். இது குறித்த அறிவிப்பை ஐசிசி வெளியிட்டு இருக்கிறது.

தினேஷ் கார்த்திக் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற்றுக் கொள்வதாக முன்பே அறிவித்திருந்தார். இந்த நிலையில் ஆர் சி பி அணி சிறப்பான முறையில் லீக் சுற்றில் இரண்டாம் பகுதியில் விளையாடி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. எனவே அவருக்கு ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி சிறந்த ஃபேர்வெல் கிடைக்கும் என எதிர்பார்ப்பு உருவானது.

- Advertisement -

இந்த நிலையில் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஆர்சிபி அணி தோல்வி அடைந்து 17வது ஆண்டாக கோப்பையை கைப்பற்ற முடியாமல் பரிதாபமாக வெளியேறியது. இதுவே தினேஷ் கார்த்திக் ஐபிஎல் வாழ்க்கையில் கடைசி போட்டியாகவும் அமைந்துவிட்டது.

நடப்பு ஐபிஎல் தொடர் நடந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு கட்டத்தில் தினேஷ் கார்த்திக் மீண்டும் டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பெறுவாரா? என்கின்ற விவாதங்கள் கூட சென்று கொண்டிருந்தது. இதுகுறித்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவும் நகைச்சுவையாக சில விஷயங்களை பேசும் இருந்தார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

தற்போது ஓய்வு பெற்றுவிட்ட தினேஷ் கார்த்திக்கை ஐசிசி எலைட் கமெண்ட்ரி பேனலில் ஒருவராக அறிவித்திருக்கிறது. எனவே அவர் நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பையில் கிரிக்கெட் வர்ணனையாளராக எலைட் பிரிவில் இடம் பெற்று செல்ல இருக்கிறார். ஏற்கனவே இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரின் போது சிறப்பான முறையில் கமெண்டரியில் ஈடுபட்டு இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : நான் ஐசிசி அம்பாசிடர் கிடையாது.. ஆனால்.. – பாகிஸ்தான் பத்திரிக்கையாளருக்கு சுரேஷ் ரெய்னா பதிலடி

இது குறித்து தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது ” இந்த டி20 உலகக்கோப்பை தொடர் பல வழிகளில் உற்சாகமான ஒன்றாக இருக்கும். 20 அணிகள் மற்றும் 55 போட்டிகள், மேலும் சில புதிய மைதானங்கள்என இது ஒரு பரபரப்பான கலவையாக அமைந்திருக்கிறது. சிறந்த வர்ணனை குழுவில் ஒரு நபராக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் உடன் விளையாடிய வீரர்கள் குறித்து நான் பேச இருப்பது சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது. என்னால் இதற்காக தற்பொழுது காத்துக் கொண்டிருக்க முடியவில்லை” என்று கூறி இருக்கிறார்.