மக்கள் என்னை இப்படி தப்பா பேசும் போது வெறுப்பும் வலியும் ஏற்படுகிறது – பாக் ஷாகின் அப்ரிடி வேதனை

0
177

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை நடைபெற உள்ள நிலையில், நாளை நடைபெற உள்ள முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாட உள்ளன.

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடி தனது கிரிக்கெட் வாழ்வில் ஏற்பட்ட மோசமான அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

- Advertisement -

சாம்பியன்ஸ் டிராபி தொடர்

2023ம் ஆண்டு பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரு நாள் உலகக் கோப்பையில் மோசமான தோல்வியை சந்தித்தது. அதற்குப் பிறகு டி20 உலக கோப்பைக்கு தயாராகும் விதமாக சாகின் அப்ரீடியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேப்டனாக அறிவித்தது. ஆனால் வரிசையாக தோல்விகளை சந்தித்த அப்ரிடியை மீண்டும் நீக்கிவிட்டு 2024ஆம் ஆண்டு டி20 உலக கோப்பைக்கு மீண்டும் பாபர் அசாமை கேப்டனாக நியமித்தது.

2024ஆம் ஆண்டு டி20 உலக கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்து வெள்ளை பந்து தொடரின் போது பயிற்சி ஊழியர்களுடன் அப்ரிடிக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் குறிப்பாக யூசுப் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக பத்திரிகைகள் தெரிவித்தனர். இருப்பினும் அவர் நிர்வாகத்தின் எச்சரிக்கையோடு விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அவர் முழு அணியிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என மற்றொரு அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் அப்ரிடி இது குறித்து சில முக்கிய கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

வலியை ஏற்படுத்துகிறது

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “டெஸ்ட் கிரிக்கெட் பொருத்தவரை நான் எப்போதும் தயாராக இருப்பேன். ஆனால் என்னை பற்றி உண்மை இல்லாத விஷயங்களை மக்கள் கூறும்போது எனக்கு வெறுப்பு ஏற்படுகிறது. பாகிஸ்தானில் துரதஷ்டவசமாக பெரும்பாலும் ரசிகர்களும், ஊடகங்களும் உண்மையை சொல்வதோ மற்றும் புகார் அளிப்பதோ இல்லை. அதை பார்க்கும் போது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. மக்கள் என்னைப் பற்றி விமர்சன ரீதியாக ஏதாவது கூறி அது உண்மையாக இருந்தால் அது எனக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.

இதையும் படிங்க:IND vs BAN.. துபாய் மைதான வரலாற்று புள்ளி விவரங்கள்.. ஆடுகளம் எப்படி இருக்கும்?.. வானிலை அறிக்கை

ஆனால் பொய்கள் தான் வலியை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக பத்திரிகைகள் உண்மைக்கு நேர்மாறாக கருத்துக்களை சொல்லும்போது அது வலியை ஏற்படுத்துகிறது. மக்கள் எனது வேகத்தில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் என்று புரிகிறது. ஆனால் 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை தவிர எனது பந்துவீச்சை பார்த்தால் மணிக்கு 135 முதல் 137 கிலோ மீட்டர் வேகத்தில் பந்தை வீசுவேன். ஆனால் மக்கள் அதை கவனித்து இப்போது எனது வேகம் குறைந்து விட்டதாக கூறுகிறார்கள். ஆனால் எனது வேகம் விக்கெட்டுகள் பெறுவதை தடுக்கிறது என நான் ஒருபோதும் உணர்ந்ததில்லை. உடல் என்பது எந்திரம் கிடையாது, நீங்கள் ஒருவேளை சோர்ந்து போகலாம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -