பிசிசிஐக்கு பதிலடி கொடுத்த பிசிபி.. இனி இந்தியாவை மிஸ் செய்யப் போகிறோம் – பாக் பகார் ஜமான் பேட்டி

0
58

பாகிஸ்தானில் அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் நிலையில் இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமான முறையில் தயாராகி வருகின்றன. இதில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் பாகிஸ்தானில் இல்லாமல் துபாயில் நடத்தப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் பகார் ஜமான் இந்தியாவில் இனி விளையாடுவதை தவறவிடுவோம் என்று சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்

இந்திய கிரிக்கெட் அணியை கடந்த 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுவதை முற்றிலுமாக தவிர்த்தது. ஆனால் பாகிஸ்தான் அணி மட்டும் ஐசிசி நிகழ்வுகள் இந்தியாவில் நடக்கும் போது மட்டும் பங்கு பெற்று விளையாடி வந்தது. இந்த சூழ்நிலையில் தற்போது பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற உள்ள நிலையில் இதில் இந்திய அணி பங்குபெற மறுத்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து வற்புறுத்தியும் பிசிசிஐ தனது நிலைப்பாட்டில் சமரசம் செய்து கொள்ளவில்லை.

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியும் இனி இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி போட்டிகளில் இந்தியாவில் விளையாடாமல் நடுநிலையான இடத்தில் விளையாடுவோம் என்று புதிய நிலைப்பாட்டை கொண்டு வந்துள்ளது. எனவே இனி இரண்டு அணிகள் கலந்து கொள்ள உள்ள ஐசிசி தொடர்கள் பொதுவான இடத்தில் நடைபெற இருக்கும் நிலையில் இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஃபகார் ஜமான் இது குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியாவில் விளையாடுவதை தவறவிடுவோம்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ஆம், நாங்கள் கடைசியாக 2023ஆம் ஆண்டு இந்தியாவில் ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் விளையாடினோம். அதற்குப் பிறகு இனி இந்தியாவில் விளையாடுவதை நாங்கள் தவற விடுவோம். நாங்கள் முதல்முறையாக ஹைதராபாத்திற்கு விளையாட சென்ற போது உள்ளூர் வாசிகள் எங்களுக்கு அன்பான வரவேற்பினை அளித்தார்கள். நாங்கள் தற்போது அனைத்தையும் இழக்கப் போகிறோம். ஒருவேளை இந்திய அணி பாகிஸ்தானுக்கு விளையாட வந்திருந்தால் அவர்களுக்கு அதைவிட மிகப்பெரிய வரவேற்பு கொடுத்திருப்போம்.

இதையும் படிங்க:தரமான பிளேயர்ஸ் வேணும்னா.. இந்திய அணி இதில் கவனம் செலுத்தணும் – ஏபி டிவில்லியர்ஸ் கருத்து

ஆனால் அவர்கள் வரவில்லை. இதுவும் நன்றாகத் தான் இருக்கிறது இந்திய அணியை நாங்கள் துபாயில் எதிர்கொண்டு விளையாடுவதில் நான் உற்சாகமாக இருக்கிறேன். இந்த தருணத்திற்காக காத்திருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார். பிசிசிஐ சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாட போகும் இந்திய அணியை இன்னும் சில நாட்களில் அறிவிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -