தரமான பிளேயர்ஸ் வேணும்னா.. இந்திய அணி இதில் கவனம் செலுத்தணும் – ஏபி டிவில்லியர்ஸ் கருத்து

0
107

இந்திய கிரிக்கெட் அணி சமீப காலமாக தொடர்ந்து சிவப்பு பந்து கிரிக்கெட்டில் மோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது. சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்த இந்திய அணி அதற்கு பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்தது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் முன்னேற்றம் அடைய தென்னாப்பிரிக்கா முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் சில முக்கிய யோசனைகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியின் தொடர் தோல்வி

இந்திய கிரிக்கெட் அணி வெள்ளை பந்து கிரிக்கெட்டில் சமீப காலமாக எவ்வளவு முன்னேற்றம் அடைந்து வருகிறதோ அதற்கு நேர் மாறாக தற்போது சிவக்குப்பந்து கிரிக்கெட்டில் தொடர் வீழ்ச்சிகளை கண்டு வருகிறது. இதற்கு நல்ல எடுத்துக்காட்டாக சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்து 0-3 என்ற கணக்கில் மோசமான தோல்வியை சந்தித்தது. அதற்குப் பிறகு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அவர்களது மண்ணில் பார்டர் கவாஸ்கர் டிராபியை 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தோல்வி அடைந்தது.

எனவே தற்போது இந்திய அணியை பொறுத்தவரை உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் இந்திய சர்வதேச வீரர்களும் உள்நாட்டுத் தொடரில் விளையாடுவதற்கு அதிக அளவில் ஆர்வம் காட்ட வேண்டும் எனவும் அப்போதுதான் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் முன்னேற்றம் அடையும் என்று தென் ஆப்பிரிக்கா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டிவிலியர்ஸ் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி இதை செய்ய வேண்டும்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “எல்லாரும் உள்நாட்டு கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று நான் எப்போதும் விரும்புகிறேன். உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இது ஒரே ஒரு போட்டிக்கு மட்டுமல்ல சிவப்பந்து கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற அர்ப்பணிப்பு இருந்தால் நிஜமாக உள்நாட்டு கிரிக்கெட் தொடருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இது எவ்வளவு எளிமையானது என்றால் உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றால் டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு விரும்பிய வீரர்களை பெற முடியாது.

இதையும் படிங்க:அவர் செஞ்சது தப்புதான்.. ஆனால் கம்பீர் இதை முன்னாடியே செஞ்சிருக்கணும் – ஹர்பஜன்சிங் கருத்து

என்னை பொருத்தவரை வீரர்களுக்கு வழிகாட்டுதல் என்பது தேவை. முடிவுகளை அவர்களாக எடுக்கக்கூடாது. உங்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் அதை மதிப்பீடு செய்து அதுக்குத் தகுந்த மாதிரி ஓய்வெடுத்து விட்டு திரும்ப செயல்பட வேண்டும். அதைத் தவிர பயிற்சியாளரும் இந்திய கிரிக்கெட் அல்லது உலகெங்கும் இருக்கிற கிரிக்கெட் வாரியங்களுக்கான முடிவுகளை இருப்பவர்கள் வீரர்களை வழிநடத்தக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்” என்று கூறுகிறார்.

- Advertisement -