இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று தொடரை முழுவதுமாக கைப்பற்றியுள்ளது.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் இந்திய வீரர் விளையாடிய விதம் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து ஒருநாள் தொடர்
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் மூன்று ஒரு நாள் போட்டிகளையும் வெற்றி பெற்று சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முழு வீச்சில் தயாராகி உள்ளது. இதில் குறிப்பாக முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி காயம் காரணமாக வெளியேற அவருக்கு பதிலாக இடம் பிடித்த ஸ்ரேயாஸ் அய்யர் அந்த வாய்ப்பை மிகவும் சிறப்பாக பயன்படுத்திக்கொண்டார். முதல் போட்டியில் சிறப்பாக விளையாடி 59 ரன்கள் குவித்த நிலையில் இரண்டாவது போட்டியில் 44 ரன்கள் மூன்றாவது ஒருநாள் போட்டியில் 78 ரன்களும் குவித்தார்.
மேலும் குறிப்பாக ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு ஸ்ரேயாஸ் அய்யர் தடுமாறும் நிலையில் இந்தத் தொடரில் அவர் சிறப்பாக விளையாடி தனது பிரச்சனையை சரி செய்தார். இந்த சூழ்நிலையில் டி20 தொடரில் விளையாடிய சஞ்சு சாம்சன் ஷாட் பால் பந்துகளுக்கு அவுட் ஆன விதம் குறித்தும் ஸ்ரேயாஸ் ஐயர் அது ஷார்ட் பால் பந்துகளுக்கு எதிராக விளையாடிய விதம் குறித்தும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
சஞ்சு சாம்சன் விளையாடிய விதம்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” உங்கள் மனதை ஒரு வாரம் பின்னோக்கி நகர்த்தி பாருங்கள். ஸ்ரேயாஸ் ஐயர் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடியிருக்கக்கூடாது. ஆட்டத்தின் முடிவில் நாங்கள் அவரிடம் பேசிய போது சிறப்பான விளக்கம் கொடுத்தார். மேலும் முதல் ஒருநாள் போட்டியில் அவர் அவ்வளவு அழகாக பேட்டிங் செய்தார். அவர் குறிப்பாக பந்துகளை எதிர்கொள்வதில் மிக விழிப்பாக இருந்தார். அவர் க்ரீசில் பின்தங்கி சிறந்த நிலைகளுக்கு வரவில்லை.
இதையும் படிங்க:ஒருவரை மட்டுமே நம்பி இல்லை.. இந்திய அணி எப்படி தரம்னு சொல்ல இந்த விஷயம் போதும் – ஹர்பஜன்சிங் கருத்து
ஆனால் அவர் தூண்டுதல் நேரம் பந்துகளை எதிர்கொள்ள அவருக்கு சிறப்பான நிலையை கொடுத்தது. அவர் செய்தது டி20 போட்டிகளில் சஞ்சு சாம்சன் செய்வதற்கு நேர்மாறாக உள்ளது. குறிப்பாக சஞ்சு சாம்சன் லெக் ஸ்டம்புக்கு நேராக பின்னோக்கி சென்று விளையாடுகிறார். அப்போது அவர் ஷார்ட் பந்துகளுக்கு எதிராக மாட்டிக் கொள்கிறார். அவர் அதை ஆப் சைடு திசையில் விளையாடுவதை மட்டுமே யோசித்துக் கொண்டிருப்பதால் ஷார்ட் பந்துகளுக்கு எதிராக அவருக் கு தடுமாற்றம் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.