பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை நிகழ்த்தி இருக்கிறது.
இதன் மூலமாக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது.
பாகிஸ்தான் அணி வரலாற்று வெற்றி
இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. உடனடியாக பாகிஸ்தான் அணி தனது அணியில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்து இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் மூன்றாவது போட்டியில் ராவல் பிண்டி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் இங்கிலாந்து அணி 267 ரன்களும் பாகிஸ்தான் அணி 344 ரன்களும் குவித்தது.
அதற்குப் பிறகு தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சால் 112 ரன்கள் மட்டுமே குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த சூழ்நிலையில் 37 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 3.1 ஓவர்களில் 37 ரன்கள் குவித்து ஒரு விக்கெட் மட்டுமே இழந்து ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது.
மூன்று சாதனைகளை நிகழ்த்திய பாகிஸ்தான்
இதில் குறிப்பாக பாகிஸ்தான் அணி 1995ஆம் ஆண்டில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக முதல் டெஸ்டில் தோல்வி அடைந்த பிறகு அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக அந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. மேலும் நவம்பர் 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் கைப்பற்றும் டெஸ்ட் தொடர் இதுவாகும். மேலும் சொந்த மண்ணில் 2021ஆம் ஆண்டுக்கு பிறகு நான்கு டெஸ்ட் தொடர்கள் கழித்து பாகிஸ்தான் இந்த டெஸ்ட் தொடரை வெற்றி பெற்றுள்ளது.
இதையும் படிங்க:தோனி ஸ்டைலில் ரன் அவுட் செய்த ஜடேஜா.. விராட் கோலி தந்த அல்டிமேட் ரியாக்ஷன்.. இந்தியா நியூஸி டெஸ்ட்
மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் இங்கிலாந்து அணிக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. 19 போட்டியில் விளையாடியுள்ள நிலையில் 9ல் வெற்றியும் 9ல் தோல்வியும் ஒரு ட்ரா என தற்போது 43.06 புள்ளி சதவீதத்தில் ஆறாவது இடத்தில் பின்தங்கி இருக்கிறது. பாகிஸ்தான் 10ல் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று எட்டாவது இடத்தில் உள்ளது. இதில் இந்திய அணி முதல் இடத்திலும் இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா அணியும் இருப்பது குறிப்பிடத்தக்கது.






