இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் நியூசிலாந்து அணி இந்திய அணிக்கு 359 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்திருக்கிறது.
இந்த சூழ்நிலையில் நியூசிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் ரவீந்திர ஜடேஜா செய்த ரன் அவுட் தோனி செய்த ரன் அவுட் போல இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரன்ட் செய்து வருகின்றனர்.
359 ரன்கள் இந்திய அணிக்கு வெற்றி இலக்கு
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஏற்கனவே தோல்வி அடைந்திருக்கும் நிலையில் புனேவில் தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 259 ரன்கள் குவிக்க, அதற்குப் பிறகு தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய இந்தியா 156 ரன்கள் மட்டுமே குவித்தது. இதற்குப் பிறகு இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் ஓரளவு நன்றாக பேட்டிங் செய்து 255 ரன்கள் குவித்தது.
இதில் குறிப்பிடத்தக்க விதமாக இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசி 19.4 ஓவர்களில் 72 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதிலும் குறிப்பாக நியூசிலாந்து அணியின் கடைசி விக்கெட்டை வீழ்த்த இவர் செய்த ரன் அவுட் தற்போது பேசு பொருளாக மாறி இருக்கிறது. இதில் இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணியின் கடைசி விக்கெட் ஆக வில்லியம் ரூர்கி களமிறங்கினார்.
ஜடேஜா செய்த நோ லுக் ரன் அவுட்
ஜடேஜாவின் ஓவரில் சிங்கிள் எடுக்க முயன்று நான் ஸ்ட்ரைக் திசையை நோக்கி ரூர்கி ஓட முயல அதற்குள் வாஷிங்டன் சுந்தர் பந்தை வேகமாக எடுத்து ஜடஜாவிடம் வீச, ஜடேஜா அதனை அற்புதமாக நோ லுக் முறையில் ரூர்கி வருவதற்குள் ஸ்டம்ப்களை சிதறடித்தார். ஜடேஜா அவுட் செய்ததும் அதனை பார்த்த விராட் கோலி கொடுத்த ரியாக்சன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதேபோல 2016ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ராஸ் டைலரை மகேந்திர சிங் தோனி இதே முறையில் ஆட்டமிழக்கச் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
The Thala effect in Ravindra Jadeja's run out. 😄pic.twitter.com/tBoXdr27O6
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 26, 2024
இதையும் படிங்க:என்ன பெரிய 359.. இந்திய அணி இதுவரை சேஸ் செய்த 5 அதிகபட்ச ரன்கள்.. 2008 சென்னை டெஸ்ட் போல சாதிக்குமா.?
தற்போது நியூசிலாந்து அணி நிர்ணயித்த 359 ரன்கள் இலக்கை விளையாடி வரும் இந்திய அணி சற்று முன்பு வரை ரெண்டு விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.இன்னும் வெற்றிக்கு 249 ரன்கள் தேவைப்பட கைவசம் எட்டு விக்கெட் இருக்கும் நிலையில் இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.






