196 ரன்.. முகமது ஹாரிஸ் 46 பந்தில் சதம்.. பங்களாதேஷ் ஓயிட் வாஸ்.. புது பாகிஸ்தான் அணி தொடரை வென்றது

0
361
Pakistan

நேற்று பாகிஸ்தான் தங்களது சொந்த மண்ணில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முகமது ஹாரிஸ் அடித்த அதிரடி சதத்தால் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றி இருக்கிறது.

தற்போது பங்களாதேஷ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் அணி வென்று ஏற்கனவே தொடரை கைப்பற்றி இருந்தது. இந்த நிலையில் மூன்றாவது போட்டியையும் வென்று தொடரை முழுமையாக கைப்பற்றி விட்டது. மேலும் பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் போன்றவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பங்களாதேஷ் தந்த சவால்

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த பங்களாதேஷ் அணிக்கு இந்த முறை தொடக்க ஆட்டக்காரர்கள் தன்ஷித் ஹசன் 32 பந்துகளில் 42 ரன்கள், பர்வேஸ் ஹொசைன் ஏமான் 34 பந்துகளில் 66 ரன்கள் என அதிரடியாக எடுத்து நல்ல துவக்கத்தை ஏற்படுத்தி தந்தார்கள்.

இதற்கு அடுத்து குறிப்பிடும்படியாக கேப்டன் லிட்டன் தாஸ் 18 பந்துகளில் 22 ரன்கள், தவ்ஹீத் ஹ்ரிடாய் 18 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார்கள். மற்ற வீரர்கள் யாரும் சரியான பங்களிப்பை பேட்டிங்கில் தரவில்லை. இதன் காரணத்தால் பங்களாதேஷ் அணியால் 200 ரன்னை எட்ட முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி மற்றும் அப்பாஸ் அப்ரிடி இரண்டு விக்கெட் வீழ்த்தினார்கள்.

- Advertisement -

முகமது ஹாரிஸ் அதிரடி சதம்

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் சையும் அயுப் 29 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் பர்கான் நான்கு பந்துகளை சந்தித்து ஒரு ரன் மட்டுமே எடுத்து ஏமாற்றம் தந்தார். ஹஸன் நவாஸ் 13 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிங்க : என்னால முடியவே முடியாது.. ஸ்ரேயாஸ் செஞ்ச அந்த காரியம் நூற்றாண்டின் செம்ம சம்பவம் – ஏபி டிவில்லியர்ஸ் பாராட்டு

ஒரு முனையில் மூன்றாவது இடத்தில் வந்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் முகமது ஹாரிஸ் அதிரடியாக விளையாடி 45 பந்துகளில் சதம் அடித்து, ஒட்டுமொத்தமாக 46 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் உடன் ஆட்டம் இழக்காமல் 107 ரன்கள் குவித்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 17.2 ஓவரில் இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது!

- Advertisement -