உலக கிரிக்கெட்

சயிம் அயூப் அபார சதம்.. டி20 பாணியில் கிளாசன் அதிரடி வீண்.. 3வது ஒருநாள்.. பாகிஸ்தான் சிறப்பான வெற்றி

பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து டி20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடும் நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நேற்று நடைபெற்றது.

- Advertisement -

இதில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் சைம் அயூபின் அபாரமான ஆட்டத்தால் டக் வொர்த் லீவ்ஸ் விதிப்படி 36 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்கா மூன்றாவது ஒருநாள்

நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. மேலும் அப்போது மழை பெய்த காரணத்தால் ஆட்டம் 50 ஓவர்களில் இருந்து 47 ஓவராக குறைக்கப்பட்டது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர் சபீக் டக் அவுட் ஆகி வெளியேறினாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சைம் அயூப் தென் ஆப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை எதிர்கொண்டு அருமையாக விளையாடினார். அவருக்கு மூன்றாவது வரிசையில் களமிறங்கிய பாபர் அசாம் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைக்க இரண்டாவது விக்கட்டுக்கு இந்த ஜோடி 115 ரன்கள் குவித்தது.

அதற்குப் பிறகு பாபர் அசாம் 52 ரன்னில் வெளியேற,கேப்டன் ரிஸ்வான் தனது சிறப்பான இன்னிங்ஸை விளையாடினார். அவரும் தன் பங்குக்கு 53 ரன்கள் குவிக்க தொடக்க ஆட்டக்காரர் சைம் அயூப் 94 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 13 பவுண்டரி மற்றும் இரண்டு சிக்சர் என 101 ரன்கள் குவித்தார். பின்னர் இறுதிக்கட்டத்தில் சல்மான் ஆகா அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 48 ரன்கள் குவிக்க பாகிஸ்தான் அணி 47 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் குவித்தது.

- Advertisement -

கிளாசன் போராட்டம் வீண்

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி களம் இறங்கியது. தென் ஆப்பிரிக்க அணியில் டோனி 26 ரன், வான்டர் டசன் 35 ரன், மார்க்ரம் 19 ரன்னின் வெளியேற வழக்கம் போல கிளாசன் இந்த போட்டியிலும் தனி ஒரு ஆளாக நின்று போராடினார். 43 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 12 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் என 188.37 ஸ்டிரைக் ரேட்டில் 81 ரன்கள் குவித்து தென்னாபிரிக்க அணியின் ரன்களை உயர்த்தினார். இருப்பினும் இறுதி கட்டத்தில் கார்பின் போஸ் 40 ரன் குவிக்க, தென் ஆப்பிரிக்க அணி 42 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையும் படிங்க:பும்ராவ நான் பெருசா பாக்கல.. ஆனா இந்த ஒரு விஷயம் மட்டும் அவருக்காக செய்வேன் – ஆஸி தொடக்க வீரர் பேட்டி

இதனால் பாகிஸ்தான் அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுவதுமாக கைப்பற்றி இருக்கிறது. பாகிஸ்தான் அணியில் சுபியன் முகீம் அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஏற்கனவே பாகிஸ்தான் அணி இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில் மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுவதுமாக கைப்பற்றி இருக்கிறது.

- Advertisement -
Published by

Recent Posts