198 ரன்.. வேற மாதிரி ஆடியோ பாகிஸ்தான் தொடரை வென்றது.. ஆஸி பரிதாப தோல்வி.. ரசிகர்கள் ஆச்சரியம்

0
7
Salman

இன்று பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியை 90 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் கைப்பற்றி அசத்தியிருக்கிறது.

தற்போது பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று இருந்தது.

- Advertisement -

பாகிஸ்தானுக்கு கேப்டன் இன்னிங்ஸ்

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பர்கான் 5 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் சையும் ஆயுப் 11 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார்.

இந்த நிலையில் மூன்றாவது இடத்தில் வந்த கேப்டன் சல்மான் அலி ஆகா சிறப்பாக விளையாடி 40 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 76 ரன்கள் எடுத்தார். விக்கெட் கீப்பர் உஸ்மான் கான் 36 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 53 ரன்கள் எடுத்தார். நட்சத்திர வீரர் பாபர் அசாம் 5 பந்தில் 2 ரன் எடுத்து ஆட்டம் நடந்தார். பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

பாகிஸ்தான் அபார வெற்றி

இதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு நட்சத்திர வீரர்கள் டிராவிஸ் ஹெட் 5 பந்தில் 4 ரன்கள், கேப்டன் மிட்சல் மார்ஸ் 14 பந்தில் 18 ரன்கள் எடுத்தார்கள். கேமரூன் கிரீன் 20 பந்தில் 35 ரன்கள் எடுத்தார். இதற்கடுத்து இறுதிக்கட்டத்தில் மேத்யூ ஷார்ட் மட்டும் தாக்குப் பிடித்து விளையாடி 23 பந்தில் 27 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிங்க: திருவனந்தபுரம் கவலைப்பட வேண்டாம்.. நாங்க ஒரு வீரருக்காக மட்டுமே காத்திருக்கோம் – சூரியகுமார் யாதவ் பேச்சு

பாகிஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலியா 108 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. பாகிஸ்தான் அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் வென்றது. பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அகமது மற்றும் சதாப் கான் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -