இந்திய கிரிக்கெட்

வெறும் 177 ஓவர்.. முடிவுக்கு வந்த பாகிஸ்தான் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் மேட்ச்.. முதல் போட்டி ரிசல்ட்

பாகிஸ்தான் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே முல்தான் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி வெறும் 177 ஓவர்கள் மட்டுமே நடைபெற்று முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு வெஸ்ட் இண்டீஸ் சனி பாகிஸ்தான் நாட்டிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் இரண்டு நாட்களுக்கு முன்பு துவங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஒரே நாளில் 19 விக்கெட்

இந்த போட்டியின் முதல் நாள் பனி மூட்டத்தின் காரணமாக கடைசி செஷன் மட்டுமே நடைபெற்றது. முதல் நாளில் நான்கு விக்கெட் இழந்து 150 ரன்கள் தாண்டி பாகிஸ்தான் அணி எடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து இரண்டாவது நாளில் 230 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. சவுத் ஷகீல் அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்தார். வாரிக்கன் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 25 ஓவர்கள் மட்டுமே விளையாடி 137 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. நோமன் அலி ஐந்து சஜித் கான் நான்கு விக்கெட் கைப்பற்றினார்கள். மேற்கொண்டு இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி மூன்று விக்கெட்டுகளை இரண்டாவது நாளிலேயே இழந்தது. இந்த இரண்டாவது நாளில் மட்டும் மொத்தம் 19 விக்கெட்டுகள் விழுந்தன.

- Advertisement -

177 ஓவர்கள் மட்டுமே நடந்த போட்டி

இதைத் தொடர்ந்து மூன்றாவது நாளில் இன்று விளையாடிய பாகிஸ்தான் அணி 157 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. கேப்டன் ஷான் மசூத் அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் வாரிக்கன் ஏழு விக்கெட்டுகள் வீழ்த்தினார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மொத்தமாக 250 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதையும் படிங்க : விராட் கோலி கேப்டனா யுவராஜ் ராயுடுக்கு செஞ்சது தப்புதான்.. என் கருத்து மாறாது – ராபின் உத்தப்பா விளக்கம்

இதைத்தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று மூன்றாவது நாளில் 36 ஓவர்கள் மட்டும் விளையாடி 123 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டிஸ் தரப்பில் அலிக் ஆதனஸ் 68 பந்தில் 55 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் சஜித் கான் ஐந்து விக்கெட் கைப்பற்றினார். இவரை ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாகிஸ்தான் அணி 127 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் நான்கு இன்னிங்ஸ்களும் சேர்த்து 177 ஓவர்களில் போட்டி முடிவுக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. முழுமையாக இரண்டு நாட்களுக்கு வீசப்படும் ஓவர்கள் கூட வீசப்படவில்லை!

- Advertisement -
Published by

Recent Posts