உலக கிரிக்கெட்

201 ரன்.. பங்களாதேஷை புரட்டி எடுத்த பாகிஸ்தான் புதிய அணி.. ஷதாப் கான் ஆல்ரவுண்ட் அசத்தல்.. முதல் டி20

நேற்று பாகிஸ்தான் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே லாகூர் மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

தற்போது பங்களாதேஷ் அணி வெள்ளைப்பந்து தொடர்களில் விளையாடுவதற்கு பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. மேலும் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இல்லாமல் புதிய பாகிஸ்தான் டி20 அணி சல்மான் அலி ஆகா தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

சேர்ந்து கலக்கிய பேட்டிங் யூனிட்

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ஆக வந்த பகார் ஜமான் 4 பந்தில் 1 ரன், சையும் அயூப் ரன் ஏதும் இல்லாமல் வெளியேறி எடுத்ததும் நெருக்கடியை உண்டாக்கினார்கள். இதைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் வந்த விக்கெட் கீப்பிங் அதிரடி பேட்ஸ்மேன் முகமது ஹாரிஸ் 18 பந்தில் 31 ரன்கள் எடுத்தார்.

இவரைத் தொடர்ந்து அடுத்தடுத்து கேப்டன் சல்மான் அலி ஆகா 34 பந்தில் 51 ரன்கள், ஹசன் நவாஸ் 22 பந்தில் 44 ரன்கள், சதாப் கான் 25 பந்தில் 48 ரன்கள் எடுத்தார்கள். பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் குவித்தது. பங்களாதேஷ் தரப்பில் சோரிஃபுல் இஸ்லாம் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

பங்களாதேஷ்க்கு மீண்டும் அடி

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய பங்களாதேஷ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் தன்ஷித் ஹசன் 17 பந்தில் 31, கேப்டன் லிட்டன் தாஸ் 30 பந்தில் 48 ரன்கள், ஜாகேர் அலி 20 பந்தில் 36 ரன்கள் எடுத்தார்கள். பங்களாதேஷ் அணி 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : கருண் எங்க இங்கிலாந்து மண்ணுல அசத்த.. இத மட்டும் செய்யுங்க.. பீட்டர்சன் தந்த ஒரு வரி ஐடியா

பாகிஸ்தான் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக பந்து வீசிய ஹசன் அலி ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றினார். பேட்டிங்கில் சிறப்பாக விளையாடிய சதாப் கான் பந்துவீச்சில் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார். மேலும் சில நாட்களுக்கு முன்பாக யுஏஇ அணிக்கு எதிராக பங்களாதேஷ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இரண்டுக்கு ஒன்று என இழந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பங்களாதேஷ் கிரிக்கெட் பெரிய சரிவை சந்தித்து வருகிறது!

- Advertisement -
Published by