இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சொந்த மண்ணில் பாகிஸ்தான அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆச்சரியப்படுத்தியது.
தற்போது ஆஸ்திரேலியா அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
சமாளித்த பாகிஸ்தான்
முதலில் பேட்டிங் செய்ய வந்த பாகிஸ்தான் அணிக்கு முதல் பந்திலையே ஃபர்கான் ரன் ஏதும் எடுக்காமல் டைமண்ட் டக் ஆகி வெளியேறினார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் சையும் ஆயுப் அதிரடியாக விளையாடி 22 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார்.
இதற்கு அடுத்து கேப்டன் சல்மான் அலி ஆகா 27 பந்துகளில் 39 ரன்கள், பாபர் அசாம் 20 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார்கள். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா பந்துவீச்சில் ஆடம் ஜாம்பா நான்கு விக்கெட் வீழ்த்தினார்.
ஆஸ்திரேலியா தோல்வி
இதைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு டிராவீஸ் ஹெட் 13 பந்தில் 23 ரன்கள், கேமரூன் கிரீன் 31 பந்தில் 36 ரன்கள், கடைசி கட்டத்தில் சேவியர் பார்ட்லெட் 25 பந்தில் 34 ரன்கள் எடுத்தார்கள். ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதையும் படிங்க : அபிஷேக் நீங்கள் பழைய ஸ்கூலுக்கு போகணும்.. அப்பதான் உலக கோப்பையை ஜெயிக்க முடியும் – அஸ்வின் அறிவுரை
இதையடுத்து பாகிஸ்தான் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் பந்துவீச்சில் சையும் ஆயுப் மற்றும் அப்ரார் அகமது இருவரும் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள். தற்போது பாகிஸ்தானின் சுழல் பந்துவீச்சு நல்ல முறையில் இருக்கிறது. மேலும் பேட்டிங்கும் ஓரளவுக்கு முன்னேறி இருப்பது நம்பிக்கை தருகிறது.






