299 ரன்.. கடைசி விக்கெட்டுக்கு மாஸ் காட்டிய இலங்கை.. பாகிஸ்தான் அணி சைலண்டாக முடித்தது – முதல் ஒரு நாள் போட்டி

0
97
Salman

நேற்று இலங்கை அணிக்கு எதிரான பரபரப்பான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தற்போது இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

சல்மான் அலி ஆகா அபாரம்

முதலில் பேட்டிங் செய்ய வந்த பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் சைம் அயூப் 6, பகார் ஜமான் 55 பந்துகளில் 32 ரன்கள், பாபர் அசாம் 59 பந்துகளில் 29 ரன்கள், முகமது ரிஸ்வான் 8 பந்துகளில் 5 ரன்கள் எடுத்த அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இதைத்தொடர்ந்து உசைன் தலாத் 63 பந்துகளில் 62 ரன்கள், முகமது நவாஸ் 23 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார்கள். ஒரு முனையில் மிகச் சிறப்பாக விளையாடி சதம் அடித்த சல்மான் அலி ஆகா 87 பந்துகளில் 9 பவுண்டரிகள் உடன் 105 ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் ஹசரங்கா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

பரபரப்பான போட்டி

இதைத் தொடர்ந்து களம் இறங்கிய இலங்கை அணி பதும் நிஷாங்கா 39 பந்தில் 29 ரன், கமில் மிஸ்ரா 36 பந்தில் 38 ரன் எடுத்து நல்ல துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். இதைத் தொடர்ந்து உள்ளே வந்த குசால் மெண்டிஸ் ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆனார். இலங்கையணி ஒரு கட்டத்தில் 37.4 ஓவரில் ஏழு விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்திருந்தது.

இதையும் படிங்க : தெஆ முதல் டெஸ்ட்.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. அதிரடியான மாற்றங்கள்.. எதிர்கால அணி உருவாக்கம்

இதைத்தொடர்ந்து சமீரா 7, தீக்ஷனா 21 ரன் என இவர்களை வைத்துக்கொண்டு ஹசரங்கா ஒரு முனையில் சிறப்பாக விளையாடி பாகிஸ்தான் அணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்தினார். கடைசியில் அவர் 52 பந்தில் 59 ரன்கள் எடுக்க, இலங்கை அணியின் வெற்றி கனவு முடிவுக்கு வந்தது. இறுதியாக 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு இலங்கை 293 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் பரபரப்பான போட்டியில் வென்றது. ஹாரிஸ் ரவுப் 4 விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -