இந்திய அணி நாளை மறுநாள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாட இருக்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவன் எப்படி அமையலாம்? என்பது குறித்து பார்க்கலாம்.
தற்போது தென் ஆப்பிரிக்க அணி மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்கு இந்தியா வந்திருக்கிறது. இதில் முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி நாளை மறுநாள் தொடங்குகிறது. புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் இந்த தொடர் இரண்டு அணிகளுக்குமே மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.
எதிர்காலத் திட்டம் வீணாகுமா?
தற்போது இந்திய டெஸ்ட் அணியில் உள்நாட்டிலும் வேகப் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் விளையாட வேண்டும் என கம்பீர விரும்புகிறார். அப்பொழுதுதான் வெளிநாட்டு மண்ணில் விளையாடும் பொழுது அனுபவமும் அணி உடனான தொடர்பும் அதிகமாக இருக்கும் என நினைக்கிறார். எனவே நிதீஷ் குமார் ரெட்டிக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு கொடுத்தார். ஆனால் அவர் பெரிய அளவில் செயல்படவில்லை.
தற்போது இந்திய டெஸ்ட் அணியில் மூன்றாவது இடமும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. இந்த இடத்தில் விளையாடும் சாய் சுதர்ஷன் தனக்கு கொடுக்கப்பட்ட இரண்டு தொடர்களின் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவில்லை. எனவே கம்பீர் இந்த இடத்தில் ஏதாவது மாறுதல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாய்ப்புள்ள மாற்றம்
தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடிய அதே பிளேயிங் லெவன் களம் இறங்கும் எனவும், அதில் ஒரே ஒரு மாற்றமாக நிதீஷ் குமார் ரெட்டி இடத்தில் பேட்டிங்கில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வரும் இரண்டாவது விக்கெட் கீப்பர் துருவ் ஜுரல் சேர்க்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பழைய வெஸ்ட் இண்டீஸ் திரும்பி வந்துடுச்சி.. நியூசிலாந்துக்கு எதிராக பட்டையை கிளப்பிய ஹோப், சேஸ்..சாண்டனர் போராட்டம் வீண்
இந்திய பிளேயிங் லெவன்: கே.எல். ராகுல், ஜெய்ஷ்வால், சாய் சுதர்ஷன், சுப்மன் கில், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜுரல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், பும்ரா மற்றும் சிராஜ்.






