பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நடைபெற்று வரும் நிலையில் முதல் இன்னிங்ஸில் மோசமாக விளையாடிய பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது.
இதில் இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் அய்யூப் மற்றும் பாபர் அசாம் கூட்டணி சிறப்பான சாதனை படைத்திருக்கிறது.
தென் ஆப்பிரிக்கா பாகிஸ்தான் இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வரும் நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முதன்முறையாக தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி சிறப்பான பேட்டிங்கின் மூலமாக முதல் இன்னிங்ஸில் 615 ரன்கள் குவித்தது.
அதற்குப் பிறகு தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்க அணியின் அபாரமான பந்துவீச்சால் 54 ஓவர்களில் 194 ரன்கள் மட்டுமே குவித்து ஃபாலோ ஆன் ஆனது. இதில் தென் ஆப்பிரிக்க அணியில் ரபாடா அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார். 421 ரன்கள் பின்தங்கி இருந்த நிலையில் பாலோவ் ஆன் அடைந்த பாகிஸ்தான் அணி தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை மூன்றாவது நாள் ஆட்டத்தில் விளையாடியது.
சாதனை படைத்த பாகிஸ்தான் அணி
ஆனால் இந்த முறை சுதாரித்துக் கொண்ட பாகிஸ்தான் அணியின் தொடக்க ஜோடி ஆன கேப்டன் அய்யூப் மற்றும் பாபர் அசாம் கூட்டணி மிகச் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 46.2 ஓவரில் 205 ரன்கள் குவித்து சாதனை ஒன்றை படைத்திருக்கிறது. அதாவது பாகிஸ்தான் அணி ஃபாலோ ஆன் அடைந்த பிறகு ஒரு விக்கெட்டுக்கு அதிகபட்ச ரன்கள் குவித்த பார்ட்னர்ஷிப் ஜோடியாக இது அமைந்தது. இதற்கு முன்னர் 1958 ஆம் ஆண்டு முகமது மற்றும் சையது அகமது கூட்டணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 154 ரன்கள் குவித்ததே அதிகபட்ச சாதனையாக அமைந்தது.
இதையும் படிங்க:பும்ரா எங்கள ரொம்ப சோதிச்சிட்டாரு.. அவர் மூலமா எங்க ஆளுங்க இந்த விஷயங்களை கத்துக்குவாங்க – ரிக்கி பாண்டிங் பேட்டி
அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அணி பாலோ ஆன் அடைந்த பிறகு 205 ரன்கள் குவித்தது அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்களாக அமைந்துள்ளது. இதற்கு முன்னர் 2008ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணியில் கிரீம் ஸ்மித் மற்றும் நெயில் ஜோடி அதிகபட்சமாக 204 ரன்கள் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 49 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்த நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இதில் பாபர் அசாம் 81 ரன்னில் வெளியேற கேப்டன் அயூப் 102 ரன்கள் குவித்து சதம் அடித்து அசத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






