வங்கதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் நடைபெற உள்ள டெஸ்ட் தொடரில் பங்கு பெற உள்ளது. இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் பாகிஸ்தானில் உள்ள ராவல் பிண்டி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்த இரு நாடுகளும் பங்கேற்க உள்ள போட்டி தொடரை எவ்வாறு பார்க்கலாம் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பாதி ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.
நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ தலைமையிலான வங்காளதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டி தொடரில் கலந்து கொள்ள உள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு முன்னரே சென்று பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வங்காளதேச அணியை பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒருபோதும் இன்று வரை பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதில்லை.
எனவே அந்தக் களங்கத்தை துடைக்கும் விதமாக தற்போது முழு பயிற்சியில் வங்கதேசம் ஈடுபட்டு வருகிறது. ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் தனது சொந்த மண்ணில் இந்த டெஸ்ட் தொடரை எதிர்கொள்ள உள்ளதால் எந்தப் பதட்டமும் இன்றி நிதானமாகவே விளையாடும்.
பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை அந்த அணியின் இரு பந்துவீச்சு ஜாம்பவான்களான அப்ரிடி மற்றும் நசீம் சா ஆகியோர் வங்காளதேச அணிக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார்கள். மேலும் பாபர் அசாம் போன்ற தரமான பேட்ஸ்மேன்களும் இருப்பதால் பாகிஸ்தான் அணி நிச்சயம் சவாலாக இருக்கும். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கு பாபர் அசாம் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருக்கும் நிலையில் சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு ஷான் மசூத் கேப்டனாக செயல்படுகிறார்.
மேலும் வங்காளதேச அணியிலும் ஷகீப் அல் ஹாசன், லிட்டன் தாஸ், மெஹந்தி ஹாசன் தஸ்கின் அகமது போன்ற தரமான வீரர்களும் வங்கதேச அணியில் அணிவகுத்துள்ளனர். எனவே வங்கதேச அணியும் பாகிஸ்தான் அணிக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்களாக இருக்க மாட்டார்கள். இந்த இரண்டு அணிகளும் மோதும் போட்டி வருகிற 21ஆம் தேதி கொழும்புவில் உள்ள ராவல் பிண்டி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க:நம்ம இந்திய 22 வயசு பையன்.. ஆஸி கிரீன பயப்பட வச்சார்.. இனி பவுலிங்ல அவர்தான் ஃபியூச்சர் – இந்திய முன்னாள் பவுலிங் கோச் பேட்டி
இந்திய நேரப்படி காலை 11 மணியளவில் தொடங்க உள்ள இந்த போட்டியை எந்தத் தொலைக்காட்சியிலும் பார்க்க இயலாது. அதற்கு பதிலாக சோனி லைவ் ஆப்பிலும், இணையதளத்திலும் கண்டுகளிக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை அறிந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இணையதளத்தில் கண்டுகளிக்கும் வசதி இருந்தாலும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாததைக் கண்டு ஏமாற்றம் அடைந்துள்ளனர்.