இந்திய கிரிக்கெட்

823 ரன் கொடுத்து.. 6 விக்கெட்டையும் தந்த பாகிஸ்தான் அணியின் சோகம்.. இங்கிலாந்து வெற்றி வாய்ப்பில் முன்னணி

தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி 800-க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்ததோடு, இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் விக்கெட்டுகளை வேகமாக வீழ்த்தி வெற்றியையும் நெருங்கி இருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 556 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு மிக அதிகபட்சமாக கேப்டன் ஷான் மசூர் 151 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணியின் தரப்பில் ஜாக் லீச் 3 விக்கெட் கைப்பற்றினார்.

இரட்டை சதமும் முச்சதமும்

இதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி வழக்கம்போல் தங்களுடைய அதிரடியான பாணியில் விளையாடி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு பெரிய நெருக்கடியை கொடுத்தது. மேலும் பேட்டிங் செய்ய மிக சாதகமாக ஆடுகளம் இருந்ததால் அவர்களை பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை.

ஜோ ரூட் 262 ரன்கள், ஹாரி புரூக் 317 ரன்கள் குவித்தார்கள். இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 454 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது. இறுதியாக 7 விக்கெட் இழப்புக்கு 823 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா மற்றும் சையும் அயூப் இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

பரிதாபமான பாகிஸ்தான் அணி

இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய முதல் பந்திலேயே அப்துல்லா ஷபிக் விக்கெட்டை இழந்தது. இதைத்தொடர்ந்து சையும் அயூப் 25, ஷான் மசூத் 11, பாபர் அசாம் 5, சவுத் சகீல் 29, முகமத் ரிஸ்வான் 10 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இதையும் படிங்க : இந்திய கிரிக்கெட் கம்மின்ஸ்க்கு நன்றி சொல்லணும்.. கம்பீர் செய்வார்னு எதிர்பார்க்கிறேன் – பசித் அலி கருத்து

இன்று நான்காம் நாள் ஆட்டநேரம் முடிவில் பாகிஸ்தான் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்து, 115 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. களத்தில் ஆஹா சல்மான் 41, அமீர் ஜமால் 27 ரன்களுடன் இருக்கிறார்கள். அட்கின்சன் மற்றும் பிரைடன் கார்ஸ் இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்கள். முதல் இன்னிங்ஸில் 556 ரன்கள் குவித்தும் தோல்வியடையும் துர்பாக்கிய நிலையில் பாகிஸ்தான் அணி இருக்கிறது.

- Advertisement -
Published by

Recent Posts