பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டராக நிதீஷ் குமார் ரெட்டி மிகச் சிறப்பாக செயல்பட்டு இருந்தார். இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி பாராட்டி பேசி இருக்கிறார்.
இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 221 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் நிதீஷ் குமார் ரெட்டி பேட்டிங்கில் 34 பந்துகளில் 74 ரன்கள், பந்துவீச்சில் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றி ஆட்டநாயகனாக வந்தார்.
இந்த வருட ஐபிஎல் தொடரின் அசத்தல் வீரர்கள்
இந்த வருடம் ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி நிர்வாகம் 20 புள்ளி 50 கோடி ரூபாய் கொடுத்து பாட் கம்மின்ஸை கேப்டனாக கொண்டு வந்தது. கேப்டனாக பொறுப்பெடுத்த அவர் அணியை முழுக்க முழுக்க அதிரடியாக செயல்படும் வகையில் மாற்றினார்.
மிகக் குறிப்பாக இந்திய வீரர்கள் அபிஷேக் ஷர்மா மற்றும் நிதீஷ்குமார் ரெட்டி இருவரும் அவருடைய கேப்டன்ஷியில் மிகச்சிறந்த வீரர்களாக வெளிப்பட்டார்கள். மேலும் தமிழக வீரர் நடராஜன் வரையில் கம்மின்ஸ் எல்லோரையும் மிகவும் நம்பிக்கை அளித்து உற்சாகமாக வழி நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கம்மின்ஸை கூறாவிட்டால் நியாயமாக இருக்காது
இதுகுறித்து பசித் அலி கூறும் பொழுது “கம்மின்ஸ்க்கு நான் ஒரு சிறப்பு குறிப்பு கொடுத்தாக வேண்டும். அவரது பெயரை நான் எடுத்துப் பேசாவிட்டால் அது அவருக்கு இழைக்கப்படும் அநிதியாகிவிடும். ஐபிஎல் தொடரில் அபிஷேக் ஷர்மா மற்றும் நிதிஷ்குமார் ரெட்டியை அவர் ஆதரித்த விதம் மிகவும் அருமையானது. இதற்காக நாம் அவரை அடையாளப்படுத்த வேண்டும்”
இதையும் படிங்க : 34 வருடங்கள்.. 317 ரன்ஸ்.. ஹாரி புரூக் பிரம்மாண்ட சாதனை.. பரிதாபமான பாகிஸ்தான் பவுலர்கள்.. அதிரடியான முதல் டெஸ்ட்
“கவுதம் கம்பீர் மீண்டும் உம்ரான் மாளிகை அழைத்து வருவார் என்றுநான் நினைக்கிறேன். காரணம் அவர் வேகப் பந்துவீச்சாளர்களை விரும்ப கூடியவராக இருக்கிறார். நிச்சயமாக கம்பீர் உம்ரான் மாலிக் பெயரை பரிசீலணையில் எடுத்துக் கொள்வார் என்று நினைக்கிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.






