சூப்பர் 8 சுற்று.. இந்தியாவின் உதவியை நாடும் பாகிஸ்தான் அணி.. தகுதி பெற என்ன செய்ய வேண்டும்.?

0
30714

இந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் அணிக்கு மிகவும் மோசமாக அமைந்திருக்கிறது. இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி குரூப் ஏ பிரிவில் நான்காவது இடத்தில் உள்ளது.

பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால், தன்னிச்சையாக அந்த அணி நன்றாக செயல்படுவது மட்டுமல்லாமல் இந்திய அணியின் உதவியும் கொஞ்சம் தேவைப்படுகிறது.

- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த உலகக் கோப்பையை தொடங்குவதற்கு முன்பாக மிகவும் நம்பிக்கையுடன் இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். தனிப்பட்ட பயிற்சிகள், பயிற்சியாளர் மாற்றம், கேப்டன் மாற்றம், முகமது அமீரின் வருகை என இந்த குறிப்பிடத்தக்க மாற்றங்களால் பாகிஸ்தான் அணி வலுவாக இருந்தது. அந்த நம்பிக்கையுடன்தான் டி20 உலக கோப்பை எதிர்கொண்டது.

ஆனால் முதல் போட்டியிலேயே கத்துக்குட்டியான அமெரிக்கா அணியிடம் சூப்பர் ஓவரில் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தது. பின்னர் இரண்டாவது போட்டியான இந்திய அணியை எதிர்கொண்டு குறைந்த ரன்களில் இந்திய அணியை சுருட்டினாலும், பேட்டிங்கில் பெரிதளவில் கோட்டை விட்டதால் இரண்டாவது போட்டியிலும் பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவி தொடரை விட்டும் வெளியேறும் நிலைக்கு வந்திருக்கிறது.

குரூப் ஏ பிரிவில் இடம் பெற்ற அணிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்று கணிப்புகள் இருந்த நிலையில், தற்போது பாகிஸ்தான் அணி முதல் அணியாக வெளியேறிவிடும் என்பது போல் தெரிகிறது. இனி பாகிஸ்தான் அணி அடுத்து சுற்றுக்குள் செல்ல வேண்டுமென்றால் இனிவரும் இரண்டு போட்டியிலும் கட்டாயம் நல்ல ரன்றேட்டில் வெற்றி பெற்றாக வேண்டும். அதற்கு தகுந்தவாறு பாகிஸ்தான் அணிக்கு கனடா மற்றும் அயர்லாந்து அணிகளுடன் போட்டி இருக்கிறது.

- Advertisement -

முதலில் இந்த இரண்டு அணிகளையும் பாகிஸ்தான் அணி நல்ல ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக வேண்டும். இதில் தற்போது குரூப் ஏ பிரிவில் இரண்டாவது இடத்தில் இருக்கும் அயர்லாந்து அணிக்கு அடுத்த போட்டியாக இந்திய அணியை எதிர்கொள்ள உள்ளது. எனவே இந்திய அணி அமெரிக்க அணியை மோசமான ரன் ரேட்டில் வீழ்த்த வேண்டும். அடுத்ததாக அயர்லாந்து அணியிடமும் அமெரிக்க அணி தோல்வி அடைய வேண்டும்.

இதையும் படிங்க:ரிஷப் பண்ட்டுக்காக கண்ணீர் விட்டேன் .. நேத்து அவர்கிட்ட ஆச்சரியப்பட்டது வேற ஒரு விஷயம் – ரவி சாஸ்திரி பேட்டி

இந்த இரண்டும் பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக அமைந்து பாகிஸ்தான் அணியும் அடுத்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால், இந்திய அணியோடு அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இல்லையெனில் அமெரிக்க அணி இந்த இரண்டு போட்டிகளில் ஏதேனும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் கூட அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விடும். இதனால் அடுத்த போட்டியில் இந்திய அணியின் உதவியை பாகிஸ்தான் அணி பெரிதும் நாடி உள்ளது.