“பாகிஸ்தான் பிரச்சனை செய்வதை நிறுத்தனும்.. உங்க நாட்டுல என் கண்ணே போயிருக்கும்!” – இர்பான் பதான் அதிரடியான கருத்து!

0
1266
Irfan

குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட பொழுது, சில விரும்பத்தகாத நிகழ்வுகள் இந்திய ரசிகர்களின் பக்கம் இருந்து நடந்தது!

பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் ஆட்டம் இழந்து திரும்பும் பொழுது இந்திய ரசிகர்களின் சிலர் மதக் கோஷங்களை அவரைப் பார்த்து எழுப்பினார்கள். இது இந்தியாவிலேயே பரபரப்பான விஷயமாக சமூக வலைதளத்தில் மாறியது.

- Advertisement -

இந்த விஷயத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகாராக ஐசிசி இடம் எடுத்துச் சென்று இருக்கிறது. எனவே இந்த பிரச்சனை தற்பொழுது வரை தீருவதாக இல்லை. இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இப்படி இருக்கும் பொழுது பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா முகமது ரிஸ்வான் மைதானத்தில் நவாஸ் செய்தது மட்டும் சரியா? பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி யார் ஒருத்தர் பேசியது சரியா? என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை நோக்கி கேள்வி கேட்டிருந்தார்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான், பாகிஸ்தான் இதை தேவையில்லாத பிரச்சினையாக மாற்றிக் கொண்டிருக்கிறது என்றும், இதை கைவிட வேண்டும் என்றும், தனக்கு பாகிஸ்தானில் என்ன நடந்தது? என்பதை கூறி விளக்கி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து இர்பான் பதான் கூறும் பொழுது ” நாங்கள் பாகிஸ்தான் பெசாவரில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது, ஒரு பாகிஸ்தான் ரசிகர் என்னை நோக்கி ஆணியை வீசினார். அது என் கண்ணுக்கு அடியில் வந்து பட்டது.

அந்த நேரத்தில் ஆட்டம் பத்து நிமிடத்திற்கு தடைப்பட்டது. ஆனால் நாங்கள் அதை ஒருபோதும் பிரச்சனையாக்க நினைக்கவில்லை. நாங்கள் பாகிஸ்தானின் விருந்தோம்பலை எப்பொழுதும் புகழவே செய்கிறோம். அப்பொழுது என் கண்கூட சேதமடைந்து இருக்கலாம். ஆனால் நாங்கள் அதைப் பற்றி ஒருபோதும் விவாதிப்பது கிடையாது.

விளையாட்டிற்கு ரசிகர்கள் எப்பொழுதும் முதன்மையானவர்கள். இதை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஆனால் சில மக்கள் தங்களுடைய சொந்த நலனுக்காக இதை தவறாக பரப்ப முயற்சி செய்கிறார்கள். எனவே கதை வேறு விதமாக செல்கிறது. அதனால் இதைக் கூற வேண்டி உள்ளது!” இன்று ஆகாஷ் சோப்ராவுக்கு பதில் அளித்து இருக்கிறார்!