உலக கிரிக்கெட்

4 அரைசதங்கள்.. உலக சாம்பியன் தென் ஆப்பிரிக்காவை கதறவிடும் பாகிஸ்தான் அணி – முதல் டெஸ்ட்

இன்று கடாபி லாகூர் மைதானத்தில் உலக சாம்பியன் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் முதல் நாள் முடிவில் வலிமையான நிலையை எட்டி இருக்கிறது.

- Advertisement -

பாகிஸ்தான் டி20 அணியில் இருந்து நீக்கப்பட்ட நட்சத்திர வீரர்கள் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு திரும்பினார்கள். இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

பாபர் ஏமாற்றம்

முதலில் பேட்டிங் செய்ய வந்த பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபிக் 2 ரன் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றம் தந்தார். இதைத் தொடர்ந்து கேப்டன் ஷான் மசூத் 147 பந்தில் 76 ரன்கள், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் 153 பந்தில் 93 ரன்கள் எடுத்தார்கள்.

இதைத்தொடர்ந்து வந்த நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம் அவுட் அப்பீலில் இருந்து தப்பி இறுதியில் 23 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றினார். அடுத்து வந்த துணை கேப்டன் சவுத் ஷகீல் ரன் ஏதும் எடுக்காமல் கோல்டன் டக் ஆகி வெளியேறினார்.

- Advertisement -

பாகிஸ்தானை மீட்ட ஜோடி

அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் பாகிஸ்தான அணி 199 ரன்னுக்கு முக்கிய ஐந்து விக்கெட்டுகளை இழந்து விட்டது. இதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த முகமது ரிஸ்வான் 62* மற்றும் சல்மான் அலி ஆகா 52* என இருவரும் அரை சதம் அடித்து ஆட்டம் இழக்காமல் நின்று பாகிஸ்தான் அணியை மீட்டார்கள்.

இதையும் படிங்க : இந்திய டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட அபிமன்யூ ஈஸ்வரன்.. முதல் முறையாக மவுனம் கலைத்து பேச்சு

இன்று முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் குவித்து இருக்கிறது. தென் ஆப்பிரிக்க தரப்பில் பந்துவீச்சில் சுழல் பந்துவீச்சாளர் சேனுரன் முத்துசாமி 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். மேலும் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by
Tags: Pak vs Sa